ஒவ்வொரு உயிரிலும் தன் முன்னோடிகளின், அமைப்பு, சாயல் முதலிய தொடர்பு அம்சங்கள், பாரம்பரிய குணங்கள், இவைகள் அந்த உயிர்களின் சந்ததிகளுக்கு இறங்கி வரும்! இதனை 1885 ஆம் ஆண்டு "கிரெகோர் ஜோஹன்மென்டல்' என்ற விஞ்ஞானி கண்டறிந்தார்.
இந்த மரபியல் செய்தி அவரவர் பரம்பரையின் உயிரணுக்களுக்குள் சங்கேத மொழியில் எழுதி வைக்கப்பட்டிருப்பதாக பறை சாற்றினார்!
இந்த உயிர்த் தொடர்பு அம்சங்கள் இயற்றுகிற வேதிமப் பொருட்களை "ஜீன்கள்' (எஉசஉந) என்று அழைத்தவர் "வில்ஹெல்ம் ஜோஹென்சன்' என்னும்
விஞ்ஞானி! இவர் டேனிஷ் நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர்.
ஜீன்ஸ் என்பவை வம்சா வழியாக ஒரு வாரிசுக்கு மூதாதையர் தம் பண்புகளைக் கொண்டுவரும் வாகனங்கள்!! அதுமட்டுமல்ல! உயிர்வாழ்வின் சக்தி
மூலாதாரங்களும் ஆகும்!
ஜீன்களாகிய மரபணு முத்துக்கள் "குரோமோசோம்கள்' (CHROMOSOMES) எனும் மாலைகளில் பதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய மாலைகள் கொண்டதே ஒரு செல்லின் உட்கரு! (NUCLEUS). செல் உட்கருவினுள் க்ரோமோசோம் உள்ளது.
ஜீன்களில் பொதிந்திருக்கும் ரகசியங்களை 1953 இல் அம்பலமாயின! இவற்றை வெளிக்கொணர்ந்தோர் ஜே.டி.வாட்சன் மற்றும் பிரான்சிஸ்கிரிக் என்ற இரு
விஞ்ஞானிகள்!
டி.என்.ஏ. எனப்படும் டீஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலத்தின் (DEAXYROBO NUCLEIC ACID) கட்டமைவை இந்த இரு விஞ்ஞானிகளே முதலில் அறிவித்தனர்.
ஒரு டி.என்.ஏ. மூலக்கூறானது முறுக்கிய (RELICAL) நூலேணி போன்ற அமைப்புடையது.
அந்த முறுக்கிய நூலேணியை நீட்டிப் பிடித்தால் இரண்டு பக்கமும் டீ ஆக்சிரிபோஸ் என்னும் சர்க்கரைப் பொருளும் (SUGAR) பாஸ்பேட்டுகளும் (PHOSPHATES)
மாறிமாறி இடம் பெறும் இரண்டு சங்கிலிகள் போல் தோன்றும்!
இரண்டுக்கும் இடையே நடுவில் படிச்சட்டங்கள் மாதிரியான அமைப்புகள் இருக்கும்! இச்சட்டங்களில்தான் டி,என்.ஏ. உயிரணுவின் இரகசியமே
அடங்கியிருக்கிறது.
மேலே சொன்ன இணைக்கும் படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் இரண்டு பாதிகளால் ஆனவை! இரண்டு அரைப்படிகள்! இவை, அடினின் (ADININE) சைட்டோசின்
(CUTOSINE), தைமின் (THYMINE) குவானின் (GUANIN) ஆகிய நான்கு மூலக்கூறுகளால் ஆனவை!
இந்த மூலக்கூறுகளை பொதுவாக மென் காரங்கள் (HASES) என்பார்கள். இவைகளுக்கு நியூக்ளியோட்டைடுகள் (NUCLEOTIDES) எனப் பெயர்.
இதில் உள்ள ஒவ்வொரு அரைப்படியும் தனக்கென்றோர் இன்னொரு பாதிப்படியுடன்தான் இணை சேரும். அடினின் தைமினுடன் மட்டுமே இணைசேரும்!
சைட்டோசின், குவானினுடன் மட்டுமே இணைசேரும்!
இதனால் அடினின் - தைமின், தைமின் - அடினின், சைட்டோசின்-குவானின், குவானின் - சைட்டோசின் ஆகிய நான்கு விதச் சேர்க்கைகள் மட்டுமே சாத்தியம்!
இந்த நான்கும் நாலெழுத்து -- அகரநிரல் (ALPHABET) -- தகவல் குறியீடுகள்!
இதனையே நாம் மரபணுச் சங்கேதம் (GENETIC CODE) என்கிறோம்! நாலெழுத்து மந்திரம்!! (மறுபடி நினைவு கொள்ள.....அடினின், தைமின், சைட்டோசின்,
குவானின்)
ஒரு வைரசின் டி.என்.ஏ. சங்கேதத்தைக் கணிப்பொறி உதவியால் கட்டவிழ்த்துப் பார்த்தனர். அதன் முழுத்தகவலும் வரிவரியாக எழுதுவதற்கு 15 மீட்டர் நீளக்
காகிதம் தேவைப்பட்டது! 1977 ஆம் ஆண்டு "ஃபிரெட் சாங்கர்' என்னும் விஞ்ஞானி சுட்டிக் காட்டிய ஆய்வு இது!
ஒரு மனிதனின் டி.என்.ஏ இரகசியத்தை முழுவதும் கணிப்பொறியினால் வாசித்து எழுதினால் 16,000 கிலோ மீட்டர்கள் நீளத்திற்குக் காகிதம் தேவைப்படும்!
(கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை!)
மனித உடலிலுள்ள அனைத்து டி.என்.ஏ. சரங்களைத் தொகுத்து 1.25 செ.மீ. பக்கமுள்ள கன சதுரப் பெட்டிக்குள் திணித்து விடலாம்! ஆனால்!....இதே சரங்களைக்
கட்டவிழ்த்து நீட்டினால் பூமியிலிருந்து சூரியனுக்கு ஒரு தடவை சென்று திரும்பும் தூரம் இருக்குமாம்!
செல்களின் செயல்பாட்டுடன், உடல் வளர்ச்சியையும் இந்த உயிரணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. செல்களின் வாழ்வில் இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே
முக்கியமானவை! ஒன்று, பிளவு பட்டு பல்கிப் பெருகுவது!.....இரண்டு, புரோட்டீன்கள் என்னும் புரதப் பொருள் தயாரிப்பதும்!
உயிரணுக்களின் குறிப்புகளுக்கு நகல் எடுத்தாற்போலவே செல்களும் செயல்படுகின்றன. ஒரு செல் பிளவு படும்போது டி.என்.ஏ. நூலேணிகள் நீளவாக்கில்
மத்தியில் வைத்து "ஜிப்' பை(ழஐட) பிரித்தாற்போல இரண்டாகப் பிரிகிறது.
அதாவது அடினின் - தைமின் இணை பிரிகிறது! சைட்டோசின் - குவோனின் அவ்வாறே இணை பிரிகிறது! இந்த ஒற்றைப் புறச்சங்கிலி ஒவ்வொன்றும்
செல்லினுள் ஆங்காங்கே மிதந்து அலைந்து கொண்டிருக்கும் மற்றொரு சங்கிலியுடன் இணை சேர்ந்து புதிய இரண்டு நூலேணிகள் தோன்றுகின்றன. இங்ஙனம்
டி.என்.ஏ. சரங்கள் இரட்டிப்பானதும் செல்லினுள் இதர உயிர் இம்மிகளும் (ORGANELLES) இரண்டிரண்டாகி ஒரே தரத்தில் இன்னொரு புதிய செல்லும்
உண்டாகிறது!
வளரும் உடல்களில் செல்களின் நகல் அச்சுப் பதிவை (REPLICATION) உருவாக்கும்!
அது மட்டுமல்ல!.....வேற்றுமைப் படுத்தலும் (DIFFRENTIATION) நிகழ்கிறது!
எல்லா உயிரினங்களிலுமே ஒரு செல்லிலிருந்துதான் உயிர் தொடங்குகின்றன. ஒரு செல் இரட்டிப்பாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி இப்படியே பல்கிப்
பெருகும். இதே வேளையில் வெவ்வேறு உறுப்புகளின் செல்கள் அவ்வவற்றின் இயல்புகளை வெளிப்படுத்தும்! இவ்வளர்ச்சியில் அந்தந்த விசேஷ செல்கள்
மட்டுமே உடல், கைகள், மூளை, இதயம் போன்ற வெவ்வேறு உறுப்புகளாக வடிவெடுக்கின்றன. இந்நிகழ்வினையையே வேற்றுமைப் படுத்தல் என்கிறோம்!
செல்களின் பணியைத் தூண்டிவிடவும், வேண்டும்போது அடக்கி நிறுத்தவும் உதவும் இரண்டு மூலக்கூறுகளும் உள்ளன. அவை முறையே, "தூண்டுவிப்பிகள்'
(ஐசஈமஇஉதந) ..."அடக்குவிப்பிகள்' (INDUCERS) என்று வழங்குவர்.
இவை ஜீன் கட்டமைப்பிலேயே பொருத்தப்பட்டுள்ள மூலக்கூறுகளாகும்!
இந்த ஜீன்கள் தம் பெற்றோரிடமிருந்து மரபுக்கூறுகளை ஏந்தி வருகின்றன. எனினும் இத்தகைய மரபுக் குணங்கள் பாட்டன் காலத்துச் சொத்து மாதிரி அடுத்த தலைமுறைக்கு உரிமையாவதில்லை. மரபின் வெவ்வேறு இயல்புகளைத் தனித் தனி ஜீன்களே சுமந்து வருகின்றன.
ஒவ்வொரு மரபணுவும் சுதந்திரமாகச் செயலாற்றுகிறது. ஒரு குறித்த மரபுக் குணத்தினைத் தாங்கி வரும் ஜீன், குரோமோசோம்களின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதிந்திருக்கும்!
குரோமோசோம்கள் செல் உட்கருவில் மிதக்கும் சிறிய இரட்டை மாலைகள் போன்றவை(இரண்டு க்ரோமோசோம்கள்). எப்போதும் இணையாகக் காணப்படும்.
மனிதரில் 23 இணைகள் (46 க்ரோமோசோம்கள்) உள்ளன.
நமது 46 குரோமோசோம்களும் அடங்கிய உட்கரு (NUCLEUS) ஒரு அங்குலத்தின் நாற்பதாயிரத்திலோர் பங்கு ஆகும். இந்த உட்கருவினுள் ஆர்.என்.ஏ. (RIBO
NUCLEIC ACID) டி.என்.ஏ. எனப்படும் டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலமும் நிறைந்திருக்கிறது. டி.என்,ஏ, குரோமோசோம்களிலும் ஆர்.என்,ஏ. உட்கருத்துக்களிலும் (NUCLEOTIDES) செறிந்து காணப்படுகின்றன.
ஒவ்வொரு மரபணுவிலும் குறிப்பிட்டதோர் புரதம் தயாரிக்கும் உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த மரபணுவின் மேற்பார்வையில்தான் செல்லினுள் புரதங்கள் உற்பத்தியாகின்றன.
இந்த உத்தரவுகள் எல்லமே நியூக்ளியோட்டைடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ. யில் நான்கு நியூக்ளியோடைட்டுகளை புரட்டிப்போட்டு ஜீன்களில் எத்துணையோ புதுப்புது புரதங்களை உருவாக்கலாம். குரோமோசோம்கஎளில் உள்ள அடினின், தைமின், சைட்டோசின், குவானின் மென்காரப்பொருட்களை (நியூக்ளியோட்டைடுகள்) மொத்தம் பலநூறுகோடி வழிகளில் இணைக்கலாம்!
ஹெச்.ஜே.முல்லர் என்னும் மரபியல் விஞ்ஞானி 2560000000000000000000000000000000000000000, (அம்மாடியோவ்) வழிகளில் இணைக்கலாம் என்கிறார்! அந்தப்புரதங்களை உயிரின் உறுப்புக்களுக்கான இயக்கச் செய்தியை ஆதரிக்கும்படி செயல் படுத்தலாம்!
சுருக்கமாகச் சொன்னால் ஒரு செல்! ஒரே ஒரு செல்! இந்த ஒரு செல்லுக்கு முழு வளர்ச்சியடையப் போகிற உயிரினத்திற்குத் தேவையான அறிவும் ஆதாரமான பொருளும் இருக்கிறது!!!!
எந்த ஒரு உறுப்பிலுள்ள செல்லை எடுத்தும் இரட்டிப்பு வர்க்கத்தில் பெருகச் செய்து அதே உறுப்பினை உண்டு பண்ண முடியும்!
ஏன்? ஆண், பெண் கலப்பின்றி இனப்பெருக்கம் (CLONING) செய்யும் மரபியல் முன்னேற்றம் தற்காலச் சாதனையாகும். இதன் பின் விளைவுகள் எப்படியிருக்குமோ தெரியாது! ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம் நம்மை திகைத்தான் வைக்கிறது. அதைவிட இயற்கையின் புதிர் நம்மை மேலும் திகைக்க வைக்கிறது!
கரு உருவாகும்போதே குழந்தையின் உடல் அமைப்பைத் தீர்மானம் செய்வது டி.என்.ஏ. தான்! பரம்பரை குணங்களை மட்டுமல்ல! பரம்பரை நோய்களையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்புவது டி,என்,ஏ. தான்! இதற்கு டி.என்.ஏ. வில் உள்ள நோய் பரப்பு செல்களை வெளியேற்றிவிட முடியும்
என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அமைதியும், அன்பும், கருணையும், நட்பும் நிலவும் செல்கள் நம் எல்லோரிடத்திலும் வந்து சேருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!

திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


