/

தாமரை!

வளமிகு மருத நிலத்துக் குளத்தில் வண்ணத் தாமரை பூக்கும்!குளத்து நீரில் எங்கும் அழகுக் 

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 9:40 am

புலவர் முத்து முருகன்

வளமிகு மருத நிலத்துக் குளத்தில் 
வண்ணத் தாமரை பூக்கும்!
குளத்து நீரில் எங்கும் அழகுக் 
கோல விளைவினை யாக்கும்!

பச்சை வண்ண இலைகள் தண்ணீர்ப் 
பரப்பின் மீது மிதக்கும்!
உச்சிப் பகுதி குவிந்து அழகாய் 
உள்ள மொட்டும் மிதக்கும்!

சிவந்த இதழ்களை விரித்து மலர்கள் 
சிரிக்கும் எழிலை இறைக்கும்!
உவந்து வந்து தேனை உண்டிட 
ஒலிக்கும் வண்டுகள் பறக்கும்!

உள்ளம் கொள்ளை போக அடடா!...
ஒவ்வொரு நாளும் காலை
வெள்ளை சிவப்பு எனவே இதழ்களை 
விரிப்பது தாமரை வேலை!

இருக்கும் இடத்தைச் சிறக்கச் செய்வதில் 
இணையிலா திருப்பவை பூக்கள்!
கருத்தாய் இதை நாம் கைக்கொளக் கூறிடும் 
கனித்தமிழ் அறநூல் பாக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.