தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொன்மொழிகள்

நல்லது செய்ய நினைக்கும்போதே நல்லது நிகழ்ந்துவிடுகிறது!

News image
Updated On :28 டிசம்பர் 2018, 6:30 pm

அ.கருப்பையா

நல்லது செய்ய நினைக்கும்போதே நல்லது நிகழ்ந்துவிடுகிறது!
 - கன்ஃபூஷியஸ்

ஒருவனிடமிருந்து வரும் பதில்களைவிட அவனிடமிருந்து வரும் கேள்விகளே அவனது புத்திசாலித்தனத்தைக் காட்டுவதாக இருக்கும்! 
- வால்டேர்

காலம் நம்மை "எழுந்து நில்!' என்று கட்டளையிடும்போது நாம் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் படுக்கத்தான் நேரிடும்! - சர்ச்சில்

அடக்கம், கனிவு, கருணை, திறமை முதலியவையும் கடவுளால் நல்ல மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளே!
- ப்ரூஸ்பர்ட்டன்

உண்மையான  பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் திரையே கிடையாது! 
- நபிகள் நாயகம்

திட்டமிடப்பட்ட பெரிய காரியங்களைவிட, முடிக்கப்பட்ட சிறிய காரியங்களே மிகச் சிறந்தவை! 
- பீட்டர் மார்ஷல்

உண்மையின் பாதையில் நடக்கும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை! 
- புத்தர்

பணிவைக் கைவிடாதிருப்போமானால் எந்த ஆபத்தும் நேரிடாது! 
- வினோபா பாவே

பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டால் போதும்!.... நமக்கு மகிழ்ச்சி உண்டாகிவிடுகிறது! 
- அன்னை சாரதாதேவி

கோபம் அழிக்கும்!.... சாந்தம் செழிக்கும்! 
- குருநானக்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.