சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குடியரசைக் கொண்டாடு!

மக்கள் தம்மை ஆளுகிறஆட்சி முறைகள் பலவுண்டு!

News image
Updated On :19 ஜனவரி 2018, 6:30 pm

மக்கள் தம்மை ஆளுகிற
ஆட்சி முறைகள் பலவுண்டு!
அக்காலத்தில் மன்னர்கள்
ஆண்டது மன்னர் ஆட்சிமுறை!

மக்கள் நலனை உயிராக 
மதித்து ஆண்ட சிலபேரும்
துக்கம் தந்து மக்களுக்குத் 
துன்பம் தந்தனர் சிலபேரும்!

இருப்பினும் எல்லா ஆட்சியிலும் 
இன்பம் பெற்று குடிவாழ
சிறப்பு மிக்க ஒரு ஆட்சி
அதுவே நல்ல குடியாட்சி!

மக்கள் ஆட்சி என்கின்ற 
மாண்பு மிக்க ஆட்சியிலே
மக்கள் தம்மைத் தாமாக
மதித்து ஆளும் சிறப்புண்டு!

வாழும் யாவரும் ஓர் குலமாய்
வாழ்வில் எல்லாம் சரிசமமாய்
மேலோர் கீழோர் என இன்றி
மேன்மை பெற்று வாழுகிறோம்!

உலகில் உள்ள நாடுகளில் 
உன்னதமானது நம் நாடு!
சகல மக்களும் சமமென்று 
சரித்திரம் படைக்க வாழுகிறோம்!

மக்கள் கைகளில் அதிகாரம்!
அதனால் மக்கள் ஒய்யாரம்
எக்காலத்தும் இன்புற்று 
இருக்க உதவும் குடியாட்சி!

இந்த நல்ல நாளமைய 
அன்று தன்னுயிர் குருதியினை 
தந்த தலைவர்கள் தமையெண்ணி 
தாய்த்திருநாட்டைப் பணிந்திடுவோம்! 

உலகில் உயர்ந்தது பாரதமே!
ஆட்சியில் சிறந்தது குடியரசு!
அழகாய் கண்களில் அதையொற்றி
கைகள் குவிந்து வணங்கிடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.