சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கருவூலம்: பல்லுயிரியம் (BIO DIVERSITY)

சூரிய மண்டலக் கோள்களில் இந்த பூமியில் மட்டுமே உயிர் அம்சல் இருக்கிறது! இந்த உயிர் அம்சமானது ஆழ்கடல், காற்று மண்டலம் மற்றும் பூமியின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்து இருக்கிறது! 

News image
Updated On :19 ஜனவரி 2018, 6:30 pm

சூரிய மண்டலக் கோள்களில் இந்த பூமியில் மட்டுமே உயிர் அம்சல் இருக்கிறது! இந்த உயிர் அம்சமானது ஆழ்கடல், காற்று மண்டலம் மற்றும் பூமியின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்து இருக்கிறது! 
இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் எதிர்காலத்தைப் பற்றி உலகமே கவலையடைந்து இருக்கிறது. இந்தப் பல்லுயிர்களை எப்படிப் பாதுகாப்பது? இதற்கான முயற்சிக்கு உத்வேகமூட்டியது சர்வதேச பல்லுயிர் வருடம்-2010.
சுமார் இருபது கிலோ மீட்டர் ஆழமுள்ள பூமியின் வெளித்தகடே உயிர் மண்டலம் (BIOSPHERE). 
இந்த உயிர் மண்டலத்தில் எண்ணிலடங்கா உயிரினங்களும், தாவரங்களும், நுண்ணுயிரிகளும் பரஸ்பரம் தமக்குள் உறவாடியும், தத்தமது வாழ்க்கைச் சூழலோடு தகவமைத்தும் உயிர்வாழ்கின்றன.
உயிர் மண்டலத்தின் பெரும்பகுதியும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணோக்கிகளின் உதவியால் மட்டுமே பார்க்க முடியும்! 
இதனால் மொத்த உயிர்த் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. கடலிலும், கரையிலும் சுமார் முப்பது இலட்சம் முதல் மூன்று கோடி வரையிலான உயிரினங்கள் இந்த பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இதில் 17 இலட்சம் உயிரினங்களுக்கு மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளன. இவை அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
எல்லாம் சரி! பல்லுயிரியம் என்றால் என்ன? ஒரு மில்லி மீட்டரின் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு அளவிலான மைக்ரோ பிளாஸ்மா முதல்....., பிரம்மாண்டமான ரெட்வுட் மரங்கள், நீலத் திமிங்கிலங்கள் வரையிலான மிக நீண்ட சங்கிலித் தொடரில் இடம் பெற்றுள்ள உயிர்த்தொகுதிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அவை தமது வடிவம், அளவு, இயல்பு, வாழ்க்கை முறை, வளர்ச்சிக்கான சந்ததி உருவாக்கம் போன்ற அனைத்து அம்சங்களிலும் ஒன்றுகொன்று வேறுபட்டு அமைந்துள்ளன. உயிர் மண்டலத்தின் இத்தகைய அனைத்து உயிர்களும், அவற்றின் வகை மாதிரிகளுமே (நடஉஇஐஉந) பல்லுயிரியம் எனப்படுகிறது. 
"பயோலாஜிகல் டைவர்சிடி' என்னும் சொல் முதன் முதலாக 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் பிரபல உயிரியல் விஞ்ஞானி ரெய்மண்ட் எஃப் டாஸ்மேனால் பயன்படுத்தப்பட்டது. என்றாலும் இதன் சுருங்கிய வடிவமான "பயோ டைவர்சிடி' என்னும் சொல் அறிவியல் வெளியீடுகளில் முதன்முதலில் பயன்படத் துவங்கியது. 1988 ஆம் ஆண்டில் இ.ஓ.வில்சன் என்னும் விஞ்ஞானி இச்சொல்லைப் பயன்படுத்தினார். பின் அறிவியல் உலகமே இச்சொல்லைப் பரவலாகப் பயன்படுத்தத் துவங்கியது.
"பல்லுயிரியம்' என்ற சொல் தற்போது மரபணுக்கள், வகை மாதிரிகள், வாழ்க்கை தகவமைப்பு போன்றவற்றையே குறிக்கிறது. இதையடுத்து விஞ்ஞானிகள் இதை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார்கள். அவை.....

1. உயிர்ப்பொருள் பல்லுயிரியம் (ஞதஎஅசஐநஅஙஅக ஈஐயஉதநஐபவ) - பூமியின் பல்வேறுபட்ட உயிர்மண்டலங்களிலும் வாழ்க்கை அமைப்பிலும் காணப்படும் தாவர-உயிரி-நுண்ணுயிரி வகைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, மற்றும் வகை மாதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்தது.

2. மரபணுப் பல்லுயிரியம் (GENETIC DIVERSITY) - ஒரே வகை மாதிரிகள் அடங்கிய பல்லுயிர்த் தொகுதிகள் உள்ளன. அவைகளின் மரபணுப் பெட்டகங்கள் பல்வகை அமைவுகள் வேறுபட்டு உள்ளன. இத்தகைய அனைத்து உயிர்களும், அவற்றின் வகை மாதிரிகளும் (SPECIES). 

3. சுற்றுச்சூழல் பல்லுயிரியம் (ECOLOGICAL DIVERSITY) - இந்த பூமியின் பல்வேறுபட்ட சுற்றுச்சூழலில் வாழும் பல்லுயிர் வகைமை.

பல்லுயிரிகளின் முக்கியத்துவம்

பூமியில் பல்லுயிர் வகைகளின் முக்கியத்துவம் கணக்கிலடங்காதவை. அது மட்டுமல்ல. அவை தமக்கென மாற்று (REPLACEMENT) எதுவும் இல்லாதவை. பரிணாமச் சங்கிலியின் கடைசிக் கண்ணியானவன் மனிதன். மனிதன் தன் உயிர் வாழ்வுக்கு பூமியிலுள்ள இந்த பல்லுயிர்ச் செழுமையையே முழுவதுமாக சார்ந்திருக்கின்றன. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் ஒரு கணக்கீட்டின்படி உலகப் பொருளாதாரத்தின் 40 சதவீதமும், மனித வாழ்வுக்குத் தேவையான 80 சதவீதமும் இந்தப் பல்லுயிர் செழுமையையே சார்ந்திருக்கிறதாம். பிற உயிர்களின் வாழ்க்கையும் இதைச் சார்ந்தே இருக்கிறது. உயிர் வாழ்வுக்கு இந்த பல்லுயிரியமே ஆதாரம். 

பல்லுயிரியத்தின் பயன்

1. உணவுப் பொருட்கள், மருந்துகள், நார்ப் பொருட்கள், எரிபொருள் போன்றவை.
2. கட்டிட நிர்மாணப் பொருட்கள்.
3. சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளின் சுத்தீகரணம்.
4. மாசுக்களை தரம் பிரித்து அழுத்துதல்.
5.காலநிலை கட்டுப்பாடு.
6. வெள்ளப்பெருக்கு, வறட்சி, வெப்பம், காற்று போன்றவற்றை கட்டுப்படுத்துதல். 
7. ஊட்டச் சத்துகளின் மறு சுழற்சி மற்றும் சேமிப்பு. 
8. நோய் மற்றும் கிருமி எதிர்ப்பு.
9. உயிர் ஆதாரங்களின் பாதுகாப்பு.
10. நீர் ஆதாரங்களின் பாதுகாப்பு.
11. மண்வளப் பாதுகாப்பு.
12. வாழ்க்கைப் பாதுகாப்பு.
மனிதன் தனது கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அழகியல் மதிப்பீடுகள் போன்ற அனைத்துமே பல்லுயிர் வகைமையையே சார்ந்திருக்கின்றன. 

பல்லுயிரியப் பகுதிகள்
(BIO DIVERSITY HOT SPOTS) 

பூமத்திய ரேகைப் பகுதிகளின் பசுமை மாறாக் காடுகளிலும், வெப்ப மண்டலக் கடல்களின் பவளப்பாறைகளிலும், கடற்கரை சார்ந்த சதுப்பு நிலங்களிலும்தான் வேற்றுமையும், ஒற்றுமையும் நிறைந்த பல்வகைப்பட்ட உயிரினங்களை இயற்கை வாரி வழங்கி இருக்கிறது. துருவப் பிரதேசங்களிலும், மலைப் பகுதிகளிலும், மணல் பிரதேசங்களிலும் பல்லுயிர்ச் செழுமை சற்று குறைவாகவே காணப்படுகிறது. 

அபாயகரமான சுற்றுச்சூழல் மாசு, அளவுக்கதிகமாக இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்றவற்றால் இந்த பூமியின் பல்லுயிர்ச் செழுமை வெகுவேகமாக அழிந்து வருகிறது. 

அழிந்து வரும் இந்த பல்லுயிர்ச் செழுமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதைக் குறித்து உயிரியல் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர். நம் சந்ததிகளுக்கும் இப் பல்லுயிர்ச் செழுமம் போய்ச் சேர வேண்டுமல்லவா? இதற்காக "நிலைத்த மேம்பாடு' (SUSTAINABLE DEVELOPMENT) என்னும் கருத்தாக்கத்தை விஞ்ஞானிகள் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.


பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பகுதிகள் மற்றும் உயிர்த்தொகுதிகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளன. அவைகளுக்குத் தீர்வாக, நார்மன் மயேர்ஸ் என்பவர் "பல்லுயிர்ப் பகுதிகள்' என்னும் கருத்தாக்கத்தை 1988 இல் வெளியிட்டார்.

சரி, இப்போது ஒரு குறிப்பிட்ட உயிர் மண்டலம் பல்லுயிரியப் பகுதி என்னும் தகுதியை எப்படிப் பெறுகிறது? இதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. 

1. சர்வதேச பல்லுயிர் வகை மாதிரியின் 0.5 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 1500 வகைமாதிரியின் தண்டுத் தாவரங்கள் (VASCULAR) அந்த பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும். மற்றொன்று அத்திணைப் பகுதியின் (ENDEMIC) அடிப்படைத் தாவரப் பிரிவுகளின் 70 சதவீதமாவது அழிந்து பட்டிருக்க வேண்டும். அண்மையில் வெளியான ஒரு கணக்கீட்டின்படி உலகெங்கும் இந்த காரணிகளைக் கொண்ட 34 பல்லுயிரியப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில்தான் இந்த பூமியிலுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்களும், தாவரங்களும் காணப்படுகின்றன. 

இந்த 34 பகுதிகளும் ஐந்து பெரும் மண்டலங்களாக வகுக்கப் பட்டுள்ளன.

1. வட மத்திய அமெரிக்கா: கலிபோர்ன்யக் காடுகள், கரீபியன் தீவுகள், மத்திய தரைக் கடல் பைன், ஓக் மரக் காடுகள், மத்திய அமெரிக்கா. 

2. தென் அமெரிக்கா: அட்லாண்டிக் காடுகள், ùஸராடோ, சிலியின் குளிர்கால மழைக்காடுகள், தும்பஸ்-சோக்கோ மக்தலினா, ஆண்ட்ரியன் பிரதேசங்கள்.

3. ஐரோப்பாவும் மத்திய ஆசியாவும்: காகஸஸ், இரானிய அனடோலியன், மத்திய தரைக் கடல் பகுதிகள், மத்திய ஆசிய மலைத் தொடர்கள்.

4. ஆப்பிரிக்கா: கேப்ஃபுளோரிஸ்டிக் பகுதிகள், கிழக்காப்பிரிக்கக் கடற்கரைப் பகுதிகள், கிழக்காப்பிரிக்க மொண்டேன் பகுதிகள், மேற்கு ஆப்பிரிக்காவின் கிளியன் காடுகள், ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி, மடகாஸ்கர் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகள், மாபுடாலேண்ட் - போண்டோலேண்ட், அல்பானி, ஸகுலண்ட் காடு. 

5. ஆசியா-பசிபிக் பகுதிகள்: கிழக்கு மெலனேஷியன் தீவுகள், வட இமாலயன் பிரதேசங்கள், இந்தோ-பர்மியப் பகுதிகள், ஜப்பான், தென்மேற்கு சீனப்பகுதிகள், நியூ காலிடோனியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், பாலினேஷியா-மைக்ரோனேஷியா, தென்மேற்கு ஆஸ்திரேலியா, சுன்டோலாந்து, வல்லேஸியா, மேற்கு மலைப்பகுதி மற்றும் இலங்கை.

வட இமாலயப் பகுதியும், மேற்ககு மலைப் பகுதி என்னும் இரண்டு பல்லுயிர் வகைத் தொகுதிகள் இந்தியாவில் உள்ளன. 

அதெல்லாம் சரி, பல்லுயிர் அழிவின் காரணங்கள் என்ன? 

அது பற்றியும், மற்றும் வேறு சில தகவல்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.