/

கதைப் பாடல்!: எங்கள் நேரு மாமா!

அழகான அறிவான எங்கள் நேரு மாமா!அலகா பாத்தினிலே பிறந்த நேரு மாமா!பலகாலம் சிறையிருந்த எங்கள் நேரு மாமா!

News image
Updated On :10 நவம்பர் 2018, 9:58 am

ரமண ராஜசேகர்


அழகான அறிவான எங்கள் நேரு மாமா!
அலகா பாத்தினிலே பிறந்த நேரு மாமா!
பலகாலம் சிறையிருந்த எங்கள் நேரு மாமா!
பாரதத்தாய் பெற்றெடுத்த எங்கள் நேரு மாமா!

விடுதலைக்குப் பாடுபட்ட எங்கள்  நேரு மாமா!
வீதியெங்கும் முழக்கமிட்ட எங்கள் நேரு மாமா!
குடியரசை வாங்கித்தந்த எங்கள் நேரு மாமா!
குழந்தைகள் விரும்புகின்ற எங்கள் நேரு மாமா!

பஞ்ச சீலக் கொள்கை தந்தார் எங்கள் நேரு மாமா!
பாரதத்தை உயர்த்த வந்தார் எங்கள் நேரு மாமா!
அளவில்லாத ஆற்றல் கொண்ட எங்கள் நேரு மாமா!
அஹிம்சை தன்னைக் கடைப்பிடித்த  எங்கள் நேரு மாமா!

இருபதாண்டு ஆட்சி செய்த எங்கள் நேரு மாமா!
இந்தியாவை உயர்த்திவிட்ட எங்கள் நேரு மாமா!
கருத்துடனே பசுமை புரட்சி தந்த நேரு மாமா!
கண்ணைப் போல நாட்டைக் காத்தார் எங்கள் நேரு மாமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.