நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூன்று கண்ணாடிகள்!: ஞானக்கிளி! - 23

ஞானம் வந்து அமர்ந்ததும் ஒரு காட்சியைக் கவனித்தது. 

News image
Updated On :23 அக்டோபர் 2018, 5:59 am

பூதலூர் முத்து

ஞானம் வந்து அமர்ந்ததும் ஒரு காட்சியைக் கவனித்தது. 

அந்தப் பிள்ளைகளோடு... புதிதாக ஒரு பெண் இருந்தாள். அவள் அவளுடைய கைப்பையிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்தாள். தலை முடியைச் சரி செய்தாள். அவள் பெயர் பொற்கொடி என்று மேரி அறிமுகம் செய்தாள். அவளோடு படிப்பவளாம். 

""பொற்கொடிக்கு என் வாழ்த்துக்கள்....தலை முடி கலையக் கூடாது.....முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்ற அவளுடைய அக்கறையைப் பாராட்டுகிறேன்.....அவள் பையிலிருந்து கண்ணாடியை எடுத்ததும் தெரியவில்லை.....வைத்ததும் தெரியவில்லை....''

""பாத்திமா சொன்னாள்...""எங்கள் தெருவில் மதியழகின்னு ஒரு பொண்ணு.....அவ, வீட்டிலே இருக்கிற பெரிய கண்ணாடி முன்னாலே போய் நின்னா, சோறு, தண்ணீர், பள்ளிக்கூடம்,....படிப்பு எல்லாவற்றையும் மறந்திடுவா...முடியைப் பின்னி ஒற்றைச் சடை....பிறகு அதைப் பிரிச்சிட்டு இரட்டைச் சடை... அவற்றைப் பின்னால் போடுவது.....முன்னால் போடுவது....அது ஒரு வழியா முடியும்....பொட்டு வைக்க...பூ வைக்க....

நேரம் எடுப்பா....பையிலே உணவுப் பாத்திரத்தை எடுத்து வைக்க மறந்திடுவா.....அம்மாதான் எடுத்து வைக்கணும்....

""இப்படி நேரம் போனா பள்ளிப் பேருந்து போயிடுமே...''

""அதே கதைதான்!.....அண்ணனிடம் சொல்லிப் பள்ளியிலே விடச் சொல்லுவா....அவருக்கு வேலை இருந்தா ஆட்டோவுக்கு வீண் செலவு....''

ஞானம் சொன்னது....""தங்கமணி ஐயா சொன்ன ஒரு செய்தி முக்கியமானது...பெண்கள் பலர் நிலைக்கண்ணாடி முன்னால வெகு நேரம் நிற்கறவங்க....ஆண்கள், பெண்கள் வேறுபாடு இல்லாம தொலைக்காட்சி என்ற கண்ணாடி, ஸ்மார்ட்ஃபோன் என்ற கண்ணாடி இவற்றுக்குப் பல மணி நேரத்தைப் பலி கொடுக்கிறாங்க....இந்த நிலை மாறினால்தான் அவங்க வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்!...''

""அக்கா!....மூன்று கண்ணாடிப் பிரச்னை உனக்கு இல்லே!....அதனால நீ மனத்தளவில் தெளிவா இருக்கே...'' என்றாள் மேரி. 

""இந்த மூன்று கண்ணாடியையும் விலக்கி வைக்க முடியாது!....அவற்றில் நமக்குப் பயன்தரக் கூடிய தேவை என்ன?....எது நம் நேரத்தை வீணாக்கும்?.... எது நம் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும்?....என்று சிந்தித்தால் போதும்!....''

நிலைக்கண்ணாடி முன்னால் அஞ்சு நிமிஷத்துக்கு மேல் வேலையே இல்லை....தொலைக்காட்சி தேவையிருந்தால் அரைமணி நேரம்....ஸ்மார்ட்போன் மிகமிக அவசியமான...முக்கியமான தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவேன்....என்று நீங்கள் ஒரு சபதம் எடுக்க வேண்டும்!....பிறகு பாருங்கள்!....உங்கள் வாழ்வு என்னும் வண்டி முன்னேற்றத்தை நோக்கிப் பச்சைக் கொடி அசையும்!...'''

ஞானம் தெளிவாகச் சொன்னது.

கிளி வரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.