நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாபுவுக்கு ஒரு பரிசு! 24

ஞானம் கிளையில் அமர்ந்தது. சிவகாமி எழுந்தாள். "அக்கா,....பாபுவுக்கு அவங்க அம்மா ஒரு அழகான கைக்கடிகாரம் பரிசாகக் கொடுத்திருக்காங்க...''

News image
Updated On :27 அக்டோபர் 2018, 4:05 am

பூதலூர் முத்து

ஞானக்கிளி!
 ஞானம் கிளையில் அமர்ந்தது. சிவகாமி எழுந்தாள். "அக்கா,....பாபுவுக்கு அவங்க அம்மா ஒரு அழகான கைக்கடிகாரம் பரிசாகக் கொடுத்திருக்காங்க...''
 "என்ன விஷயம்?''
 முதல் நாள் நடந்ததை அவள் சொன்னாள்.
 ""பாபு அப்போதுதான் பள்ளி வாயிலில் நுழைந்தான். கைப்பேசியை (செல்ஃபோன்) பள்ளியில் அதற்கான பொறுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டும்.
 அவனுடைய அம்மா கல்யாணிக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அதைச் சொன்னபின் கொடுக்கலாம் என நினைத்தான். அதே நேரத்தில் கல்யாணிக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. பாபுவுக்குப் பேசியில் அழைப்பு.
 ""பாபு, நீ காலையிலேயே செய்தித்தாளில் பார்த்துவிட்டு நம்ம பகுதியிலே மின்தடைன்னு சொன்னே....அந்த நேரம் முடிஞ்சு மின்சாரம் வந்திருக்கும்.....மோட்டாரை நிறுத்தாம வெளியில் கிளம்பி வந்திட்டேன்....''
 "அம்மா,....கவலைப்படாதேம்மா!..... நான் நிறுத்திட்டேன்!.....செடிக்குத் தண்ணீர் ஊற்றும் "ஹோஸ்பைப்'பிலும் தண்ணீர் போனபடி இருந்துச்சு....அதையும் நிறுத்திட்டேன்!....கதவு, கேட்டையும் பூட்டிட்டேன்...''
 " பாபு இப்படிச் சொன்னதும் கல்யாணி அம்மா வயிற்றிலே பால் வார்த்தது மாதிரி இருக்குமே.... பெரிய விஷயங்களில் ஈடுபட்டுத்தான் குடும்பத்துக்கு நிம்மதியைத் தர வேண்டும் என்பதில்லை!....
 சிறிய விஷயங்களில் கவனமாக இருந்து,...உதவி செய்தாலே போதும்!....அதுவே பெரிய நன்மைதான்!....வாகனத்திலே சின்ன திருகாணிதானேன்னு விட முடியுமா?...அதையும் சரியாத்தான் முடுக்கணும்!....'' என்றது ஞானம்.
 "அக்கா, சரியாச் சொன்னே....நாம் வழக்கமாகச் செய்கிற வேலை இது இல்லையே என்று பாபு வந்திருந்தா மோட்டார் பழுதாகி இருக்கும்....மேல் தொட்டியிலே நீர் நிரம்பி வீணாகத் தெருவுக்குப் போயிருக்கும்....''
 "எவ்வளவு பொறுப்புணர்ச்சி!....''
 "அது மட்டுமில்லே....பாபு தினந்தோறும் சற்று நேரம் செய்தித்தாள் படிப்பான்....படிப்பு தொடர்பான செய்தி,....தன்னம்பிக்கைக் கதைகள் எல்லாம் படிப்பான்.....மின்தடை பற்றிய தகவல் இருந்தால் அம்மாவிடம் தெரிவிப்பான்...''
 "படிக்கிற பிள்ளைக்கு இதுதான் அழகு!....'' ...பாபுவை அருகில் அழைத்தது. அவன் தோளில் அமர்ந்தது.
 அம்மா அன்போடு வாங்கித் தந்த அந்தக் கடிகாரத்தை அவன் ஞானத்திடம் காட்டினான். பிள்ளைகளும் பார்த்து மகிழ்ந்தார்கள்.....அவனுடைய கைகளைப் பற்றிப் பாராட்டும் வாழ்த்தும் கூறினார்கள்.
 கிளி வரும்....
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.