அருள் தெய்வம் - அரச மரம்
என்ன குழந்தைகளே நலமாக
இருக்கிறீர்களா ?
நான் தான் அரச மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் ஃபைகஸ் ரிலிஜியோசா. நான் மோரேசியே குடும்பத்தை சேர்ந்தவன். என்னை மரங்களின் அரசனாக மக்கள் மதிக்கிறார்கள். அனைத்து மரங்களையும் விட எனக்குத் தான் தனி சிறப்புகள் அதிகம். என் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் சிவனும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே என்னை ராஜ விருட்சம் என மக்கள் அழைக்கிறார்கள். "மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்' என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். எனக்கு கருமேகங்களை கவர்ந்திழுக்கும் சக்தியும், மழையைக் கவர்ந்திழுக்கும் ஆற்றலும் உண்டு.
தமிழகத்தில் இன்றும் குளக்கரை, திருக்கோயில்களில் நான் இல்லாத கிராமங்களைக் காண முடியாது. பிள்ளையார் என் நிழலில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிப்பார். என்னை ஆண் தெய்வமாகவும், வேப்ப மரத்தை பெண்ணாகவும் பாவித்து மக்கள் வழிபடுகிறார்கள். பூர்விக காலம் தொட்டே நான் இந்தியாவில் வசித்து வருகிறேன். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதை குழந்தைகளே நீங்கள் அறிவீர்கள். அந்த போதி மரம் என்பது நான் தான். நீண்டு நெடிந்து வளர்ந்து அழகான இலைகள் என்று பரந்து, விரிந்து வளரும் எனக்கு ஞானவிருட்சம், அஸ்வத்தம், திருமரம், போதி, கண்வம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு. நான் திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவஸ்தலங்களில் தலவிருட்சமாக நான் இருக்கிறேன்.
"அரச மரத்தில் உயிர்க்காற்று இலவசம்', "ஆரோக்கியம் தரும் அரச மரம்', "அரசனாக விளங்கும் அரசமரம்' ஆகிய பழமொழிகள் என்னுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. பூக்காமலே காய்க்கும் தாவர இனத்தை "வனஸ்பதி'என்பர். நான் வனஸ்பதிகளின் தலைவன்.
என்னுடைய காற்று கருப்பை கோளாறு
களைப் போக்கும். நான் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி மன அமைதியையும் கொடுப்பேன். நான் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை உங்களுக்காக வெளியிடுகிறேன் குழந்தைகளே. என் மற்ற சகோதர, சகோதரிகள் 12 மணி நேரம் ஆக்சிஜனும், 12 மணி நேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றுவார்கள். ஆனால், நான் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியேற்றுகிறேன். இந்தப் பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன் காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் காற்றில் கலந்து உங்களின் நாளமில்லை சுரப்பிகளின் செயல்பாடுகளைத் தூண்டி, நரம்பு தளர்ச்சிகளை நீக்குகிறது. உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறேன். அதனால் தான் என்னை திருக்கோயில்களில் சுற்றுச் சூழலை பராமரிக்கவும், கிராமங்களில், மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலும் என்னை நட்டு வளர்த்தார்கள்.
எனக்கும், வியாழன் கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. நான் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை என் உடலில் உறிஞ்சிக் கொண்டு, அடைத்து பாதுகாத்துக் கொள்வேன். அது தான் என் உடம்பிலுள்ள அனைத்து பாகமும் மருத்துவ குணமாக மாற காரணமாகிறது. நான் மக்களுக்கு அருளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறேன். நான் தமிழாண்டில் ஆங்கிரஸ் ஆண்டை சேர்ந்தவன்.
நான் திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவஸ்தலங்களில் தலவிருட்சமாக நான் இருக்கிறேன்.
என்னுடைய ராசி தனுசு, நட்சத்திரம் பூசம்.
மரம் இல்லையெனில் மழை இல்லை, மழை இல்லையெனில் எதுவும் இல்லை
நன்றி குழந்தைகளே ! வர்ட்டா !
(வளருவேன்)
- பா.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

