பாராட்டுப் பாமாலை! 15 - வீர "முத்து மாரி ' அம்மா!
கோவா வால்பாறை அருகினிலேபெரிய கல்லாறை ஊரினிலேசேவை உணர்வுடை சத்யாவெனும்


கோவா வால்பாறை அருகினிலே
பெரிய கல்லாறை ஊரினிலே
சேவை உணர்வுடை சத்யாவெனும்
சிறுமி வீட்டின் பின்புறத்தில்
செடிக்குநீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்
திடீரென்று வந்திட்ட புலி ஒன்று
துடிப்பாய் சிறுமியின் மேல் பாய்ந்தே
தூக்கி இழுத்தே சென்றதுவாம்!
அலறல் சத்தம் கேட்டவுடன்
அம்மா "முத்து மாரி' யுமே
பலமுடன் கட்டை ஒன்றாலே
பாய்ந்தே புலியை அடித்தாராம்!
அடிபட்ட புலியும் சிறுமிதனை
அங்கேயே விட்டுவிட் டோடியதாம்!
தப்பினாள் அந்த சின்னக் குழந்தை - தாய்
துணிவுடன் புலியைத் தாக்கியதால்!
புலிதனை முறத்தினால் அடித்து விரட்டிய
வீரத் தமிழ்ப் பெண் செயல் மீண்டும்
கண்முன் நடந்தது! கேட்டோர் வியந்தனர்!
கைகள் தட்டிப் பாராட்டினரே!
வீர முத்து மாரிக்கு "கல்பனா சாவ்லா'
விருதினை அளித்தது அரசாங்கம்! - இதைப்
படித்தோர் அனைவர் உள்ளத்தினிலும்
வீரம் தோன்றும் இது திண்ணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...