தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இயேசு பிறந்தார்!

அன்னை மரியாள் மடி பிறந்த அன்பின் வடிவாம் இயேசு பிரான்!தன்னை வானவர் இருவருமே

News image
Updated On :21 டிசம்பர் 2019, 3:52 pm

அ.கருப்பையா

அன்னை மரியாள் மடி பிறந்த 
அன்பின் வடிவாம் இயேசு பிரான்!
தன்னை வானவர் இருவருமே
தாங்கி உலகிற்குத் தந்தனரே!


வளர்ந்தவர் இயற்கை அறிவாலே
வாழும் மக்களின் நிலை கண்டார்!
தளர்ந்த நிலையை மாற்றுதற்கு 
தாமே முயற்சி மேற்கொண்டார்!


....""கிடைக்கும் எதுவும் எளிதாக 
கெஞ்சி இறைவனைக் கேட்டாலே 
அடைக்கும் கதவும் திறந்து விடும்!''....
அன்புடன் தட்டுங்கள் என்றாரே!


பன்னிரு சீடர்கள் உடன் வரவே
பார்வை இழந்தோர் முடவர்களை 
தன்னிரு கரத்தால் துயர் துடைத்து 
தரைமேல் நலமாய் வாழ வைத்தார்!


பாவம் செய்தோர் குறை நீங்கி
பாவம் எல்லாம் தான் சுமந்து 
தேவன் அருளால் பரிசுத்தம்
தேடிக் கொடுத்தார் எல்லோர்க்கும்!


மலைமேல் நின்று கரம் நீட்டி
மாண்புறு அறிவுரை பகர்ந்தாரே
விலை மதிப்பில்லா அதை மக்கள்
வேதம் என்றே கருதினரே!


இல்லம் தோறும் இரவினிலே 
கிறிஸ்துமஸ் தாத்தா நற்செய்தி 
சொல்ல வருவார் இன்றைக்கு 
"சுற்றமும், நட்பும் வாழ்க' என்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.