திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

விவேகானந்தரின் பொன்மொழிகள்

ஒவ்வொரு உயிருமே மிக உயர்ந்த தெய்வத்தின் திருக்கோயில்தான்.

News image
Updated On :16 பிப்ரவரி 2019, 9:32 am


1. ஒவ்வொரு உயிருமே மிக உயர்ந்த தெய்வத்தின் திருக்கோயில்தான்.

2. தைரியமாக இரு! மனப்பூர்வமாக பணி புரி! பக்தி வழியில் செல்! நீ கடவுளை அடைந்து விடுவாய்! 

3. எங்கே தவம் முடிந்து விடுகிறதோ அங்கே சமயம் துவங்குகின்றது.

4. மகத்தான சாதனைகளைப் புரியும் பணி எதுவுமே மெல்ல மெல்லத்தான் நிகழும்.

5. கலை என்பது அழகைப் பிரதிபலிப்பது. ஒவ்வொரு செயலிலுமே கலை இருக்க வேண்டும்.

6. நிர்மாணம் செய்வதுதான் நான் பணிபுரியும் வழி. இடித்துத் தள்ளுவது அல்ல.

7. எல்லாச் சமயங்களிலும் மிக முக்கியமான நல்லொழுக்கம் வைராக்கியமே.

8. வெறி, இரத்தம் சிந்துதல், வன்முறை இவை ஒழியாவிட்டால் எந்த நாடும் முன்னேறாது.

9. உண்மையான நாகரீகம் என்பது மிருகத் தன்மையுடன் வாழும் மனிதனை அவ்வாழ்க்கையிலிருந்து வெளிக்கொண்டு வருவதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.