வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நம்பிக்கை!

ராமுவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சோமுவுக்கு கடவுள் மீது சற்றும் நம்பிக்கை இல்லை. அந்நாட்டு அரசன் இவர்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து ஒரு சோதனை மேற்கொண்டான். 

News image
Updated On :8 மார்ச் 2019, 6:30 pm

மாதவன்

ராமுவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சோமுவுக்கு கடவுள் மீது சற்றும் நம்பிக்கை இல்லை. அந்நாட்டு அரசன் இவர்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து ஒரு சோதனை மேற்கொண்டான். 

ராமு அறையில் படுத்துக் கொண்டான். சோமுவோ அறையில் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று  பார்த்தான். அறையில் ஒரு சிறு மூட்டை இருந்தது. அது சோமுவிடம் அகப்பட்டது. அதைக் கையால் தடவிப் பார்த்துப் பையின் முடிச்சை அவிழ்த்தான் சோமு. பையில் கற்களும் உரித்த வேர்க்கடலையும் கலந்திருந்தது. வேர்க்கடலையை வாயில் போட்டுக்கொண்டான் சோமு. கற்களை கீழே எறிந்து விட்டான். இப்படியே வேர்க்கடலையைத் தின்று விட்டு வாயில் அகப்பட்ட கற்களை மட்டும் கீழே எறிந்து விட்டான். 

வேர்க்கடலைகளைச் சாப்பிட்டு முடித்த சோமு கற்களை சேகரித்தான். படுத்திருந்த ராமுவைப் பார்த்தான். 

சோமு, ராமுவைப்  பார்த்துக் கிண்டலாக, ""இந்தா உன் சோம்பலுக்குப் பரிசு!.... '' என்று கற்களை அவன் மீது வீசிசெறிந்தான். ராமு அந்தக் கற்களை தன் துண்டில் ஏந்திக்கொண்டான். அவற்றை ஒரு சிறு மூட்டையாக முடிந்துகொண்டான்.

மறுநாள் காலை... அறை திறக்கப்பட்டது! அரசன் அவர்களை நோக்கி, ""அறையில் உங்களுக்கு என்ன கிடைத்தது?...'' என விசாரித்தான்.  கடவுள் நம்பிக்கை இல்லாத சோமு, ""எனக்கு ராத்திரிப் பசிக்கு வேர்க்கடலை கிடைத்தது!...'' என்று கூறி வெளியேறினான். 

அரசன் ராமுவைப் பார்த்து, ""உனக்கு?...'' எனக் கேட்டான்.

""தெரியவில்லை  மஹாராஜா, சோமு சில கற்களை என் மீது வீசியெறிந்தான்...அவற்றை நான் ஒரு சின்ன துண்டில் கட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்... இதுதான் அந்த மூட்டை...''

""அதை அவிழ்த்துப் பார்!'' என்றான் அரசன்.

மூட்டையைப் பிரித்துப் பார்த்த ராமு அசந்து போனான். அதில் ரத்தினக் கற்கள் இருந்தன! அவற்றை அரசனிடம் நீட்டினான் ராமு.

""பரவாயில்லை அவற்றை நீயே வைத்துக்கொள்!...'' என்றார் அரசர் சிரித்துக் கொண்டே.

கடவுளுக்கு நன்றி  கூறிவிட்டு விலையுயர்ந்த அந்த ரத்தினக் கற்களை எடுத்துச் சென்றான் ராமு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.