டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளிக்குப் போகும் பட்டாம்பூச்சிகள்!

பள்ளிகள் யாவையும் பூவனங்கள்பட்டாம் பூச்சிகள் மாணவர்கள்!

News image
Updated On :8 மார்ச் 2019, 6:30 pm

தளவை இளங்குமரன்


பள்ளிகள் யாவையும் பூவனங்கள்
பட்டாம் பூச்சிகள் மாணவர்கள்!
அள்ளி நற் போதனைத் தேன் வழங்கும் 
அனைத்து நூல்களும் பூவினங்கள்!

வன்பசி போக்கிட ஒரு பூத்தேன் 
வண்ணத்துப் பூச்சிக்குப் போதாது!
விண்புகழ் தேக்கிடச் சிலநூல்தான் 
விரித்துப் படித்தால் தேறாது!

வாயுடன் வயிறும் உள்ளவரை 
வருகிற பசியும் தீறாது!
ஆயுளும் உலகில் உள்ளவரை 
அறிவெனும் பசியும் ஆறாது!

தினைத்துணைத் தேனுக்குப் பல பூக்கள்
தேடிடும் பட்டாம் பூச்சிகள் போல் 
பனைத்துளை ஞானத்தைப் பலநூல்கள் 
படிப்பதில் பெர்றே வாழ்ந்திடுவீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.