சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மூன்று சக்திகள்!

சக்தி தேவி உன்னையேசரணம் என்று பணிகிறோம்!பக்தி செய்யும் எம்மை நீ 

News image
Updated On :5 அக்டோபர் 2019, 1:28 pm

சக்தி தேவி உன்னையே
சரணம் என்று பணிகிறோம்!
பக்தி செய்யும் எம்மை நீ 
பாது காக்க வேண்டுமே!

அன்னை உன்னைப் பணிவதால் 
அதிக வளங்கள் கூடுமே!
உன்னை தினமும் வணங்கினால் 
உறுதி மனதில் தோன்றுமே!

இச்சை ஞானக் கிரியை என  
இவைதான் மூன்று சக்தியாம்!
மெச்சி உன்னைப் பாடினால் 
மேன்மை வந்து கூடிடும்!

மன்னன் மகள் மலைமகள்!
மாதவர்க்கு அலைமகள்!
எண்ணும் எழுத்தும் வசப்பட 
இனிது அருளும் கலைமகள்!

மூவரையும் போற்றிடும் 
மூன்று, மூன்று நாட்களாம்!
நவராத்திரி நாட்களில் 
நம்பித் தொழுது போற்றுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.