நினைவுச் சுடர்!: ஹூசைனின் உள்ளம்!
அண்ணல் நபிக்கு இரண்டு பேரர்கள் இருந்தனர். ஒருவரின் பெயர் ஹாசன். மற்றொருவரின் பெயர் ஹூசைன். ஹாசன் அண்ணன்-ஹூசைன் தம்பி. சிறுவயதில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அண்ணல் நபிக்கு இரண்டு பேரர்கள் இருந்தனர். ஒருவரின் பெயர் ஹாசன். மற்றொருவரின் பெயர் ஹூசைன். ஹாசன் அண்ணன்-ஹூசைன் தம்பி. சிறுவயதில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விளையாட்டின்போது ஏதோ காரணத்தால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது! அதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். இது அவரது அருமைத் தாயாருக்குத் தெரிய வந்தது. மறுநாள் சரியாகிவிடும் என நினைத்தார். ஆனால் அப்படி ஆகவில்லை. இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
கூடப் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசாமலிருந்தது தாயாருக்கு மன வேதனையளித்தது. தன் இரு மகன்களையும் அருகில் வருமாறு அழைத்தார். அவர்களிடம், ""ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்கள் பேசாமல் இருந்தால் அது அவனுக்கு அதிக பட்ச தண்டனையை வழங்குவது போலாகும்!..... இது நபிகளின் பொன்மொழியாகும்!..... இதனை நாமே மீறலாமா?..... யோசித்துப் பாருங்கள்!''
இதைக் கேட்ட ஹூசைன், ""ஆமாம் அம்மா!.... அது எனக்குத் தெரியும்..... அந்தப் பொன்மொழியை நான் படித்திருக்கிறேன்!..... அப்படிப் பேசாதிருக்கும் இருவரில் எவர் முதலில் சலாம் செய்கிறாரோ, அவருக்கே அதிகப் பலனும், புண்ணியமும் உண்டு என்பதையும் நான் அறிவேன்!.... அந்தப் பலனும், புண்ணியமும் அண்ணனுக்கே கிடைக்க வேண்டும் என்றுதான் நான் காத்திருக்கிறேன்.... இது தப்பாம்மா?'' என்று கேட்ட ஹூசைனைப் பார்த்ததும் அன்னை வியந்தார்.
இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஹாசனின் கண்கள் பனித்தன. ஹாசன் ஓடோடி வந்து தம்பிக்கு ஒரு சலாம் செய்துவிட்டு அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
மகிழ்ச்சியுடன் இருவரையும் பார்த்துப் பெருமிதம் அடைந்தார் அவர்களது அன்னை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...