

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் உணவுக்குச் சுவையூட்டும் பொருள் ஒன்றைத் தயாரிக்கும் இடத்தின் பெயர் கிடைக்கும். உங்களால் முடியாததில்லை... சீக்கிரம் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. கட்டளை என்பதற்கு மற்றொரு சொல்...
2. அப்பளத்தை இப்படியும் அழைப்பார்கள்...
3. இதில் வெற்றி கிடைத்தால் கோப்பை கிடைக்கும்...
4. குளிருக்கு இதமான போர்வை...
5. கிராமத்துக்காரர்கள், நகரத்தை இப்படிச் சொல்வார்கள்..
விடை:
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. உத்தரவு,
2. பப்படம்,
3. பந்தயம்,
4. கம்பளம்,
5. பட்டணம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : உப்பளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.