உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஐந்தறிவுக்குட்டி நாய்!

கண்ணிமைத்து என்னைப் பார்க்கும்கருத்து உரைக்கக் குறைத்திடும்!

News image
Updated On :25 ஜூலை 2020, 6:00 am IST


கண்ணிமைத்து என்னைப் பார்க்கும்
கருத்து உரைக்கக் குறைத்திடும்!
உண்ணும் சோற்றைக் கவ்வித் தின்னும் 
நீரை நக்கிக் குடித்திடும்! 

பழக்கம் உள்ளோர் தொலைவில் வந்தால் 
பாசத்தோடு ஓடிடும்!
வழக்கம் போல வாலை ஆட்டும்
வாயால் முனகி அழைத்திடும்!

செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு 
சிறிதும் இல்லா ஒரு சிலர் 
செல்லமாகக் குனிந்து தூக்கித்
தோளில் தூக்கி மகிழுவர்!

ஆறறிவை நன்றி கொண்டு 
வெல்லுகின்ற குட்டி நாய் 
பேறு மிக்க ஐந்தறிவு 
ஜீவனென்பேன் சிறுவனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.