கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

விளையாடு தம்பி!

பந்து விளையாடு பட்டம் விளையாடு!பம்பரம் சுற்று தம்பி!வந்து விளையாடு கண்ணா மூச்சிக்கு

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:07 pm IST

பந்து விளையாடு பட்டம் விளையாடு!
பம்பரம் சுற்று தம்பி!
வந்து விளையாடு கண்ணா மூச்சிக்கு
வட்டம் உருவாக்கு தம்பி!

கூடி விளையாடு குழந்தை பலரோடு
கோலி விளையாடு தம்பி!
பாடி விளையாடு கபடி விளையாட்டில்
ஓடி விளையாடு தம்பி!

சேர்ந்து விளையாடு சிரித்து விளையாடு 
சிறிய மணல் வீடு கட்டு!
சோர்வு வருமாயின் கொஞ்சம் இளைப்பாறு
களைப்பு வெளியேறும் தம்பி!

பொழியும் மழைநேரம் தாளில் உருவாகும் 
கப்பல் விடவேண்டும் தம்பி!
ஒளிந்து விளையாடும் கள்ளன் போலீசில் 
ஒண்ணு ரெண்டு நீ சொல்லு!

தாண்டி விளையாடு தாவி விளையாடு
சறுக்கி விளையாடு தம்பி!
கூட்டுப் பொரியலுடன் மண்ணை உணவாக்கு
மண்ணும் மணமாகும் உன்னால்!

பொம்மை மடிமீதில் வைத்து விளையாடு
உண்மை உறவோடு கொஞ்சு
நம்மை வலுவாக்கும் நன்மை விளைவாக்கும்
நாளும் விளையாடி மகிழ்வாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.