

அஞ்சல் சேவை செய்பவர்கள்
அயரா உழைப்பில் உயர்ந்தவர்கள்
அஞ்சுகின்ற வெயில்தனிலும்
அவர்தம் சேவை நிற்பதில்லை!
இடியும் மழையும் இருந்தாலென்?
இவர்தம் சேவை தொடர்ந்திடுமே!
கடிதில் கடிதம் சேர்ப்பதற்கு
கடினமாகத் தாமுழைப்பார்
கடிதம் என்னும் இலக்கியத்தால்
காசினியையே இணைத்திடுவர்!
படிப்போர்க்கெல்லாம் மகிழ்வூட்டும்
பணிக்காய் நன்றாய் உழைத்திடுவார்!
உறவு நட்பு மனிதத்தை
உணர்த்தும் கடிதப் பாலத்தை
திறமையோடு கட்டுகிற
தெய்வம் அஞ்சல்காரர்தான்!
அனைத்துத் தொடர்பாய் அலைபேசி
அறிவுத் தொடர்பாய் வலைத்தளங்கள்
அனைத்தும் இங்கே இருந்தாலென்?
அஞ்சல் அட்டை ஆனந்தம்!
கடிதம் எழுதும் பழக்கத்தை
கண்டிப்பாகத் தொடர்ந்திடுவீர்!
மடியில் கணினி இருந்தாலும்
மனதின் மகிழ்ச்சி கடிதம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டிற்கு குருகிராம் மாநகராட்சி ஒப்புதல்

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

