நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அங்கிள் ஆன்டெனா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடை இருக்கிறது. பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் சேர்த்து எடை போட்டால் எவ்வளவு கிலோ தேறுவார்கள்....?

News image
Updated On :28 நவம்பர் 2020, 11:16 am

தினமணி

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடை இருக்கிறது. பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் சேர்த்து எடை போட்டால் எவ்வளவு கிலோ தேறுவார்கள்....?

பதில்: ஒரு பெரிய தராசில் உலக மக்கள் அனைவரையும் ஒரு தட்டில் நிறுத்தி வைத்து எடை போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? இது முடியாத காரியம்தான். ஆனால் லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் டாபிக்கல் மெடிசின் என்ற நிறுவனம் இதை வேறுவிதமாகச் செய்து முடித்து ஒரு
கணக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி... உலகில் உள்ள மக்கள் அனைவரும் உருவத்திலும் எடையிலும் வெவ்வேறானவர்கள் அல்லவா? ஆகவே பல்வேறு விதமான கணக்குகளைப் போட்டு சராசரி மனிதனின் எடை 62 கிலோ என்ற முடிவுக்கு வந்தார்கள். இதில் ஒல்லி மனிதர்களும் குண்டு மனிதர்களும் குழந்தைகளும் இளைஞர்களும் என எல்லோரும் அடக்கம். இதை வைத்து மொத்த உலக மக்கள்தொகைக் கணக்கைப் பெருக்கிப் பார்த்தால் உலக மக்களின் மொத்த எடை 316 மில்லியன் டன் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆக உலக மக்களின் மொத்த எடை 316 மில்லியன் டன். மக்கள் தொகை கூடக் கூட இந்த எடையும் கூடிக்கொண்டே போகும். பூமி தாங்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.