தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நம்மை ஆளும் பாரதி!

ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப் பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப் பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

DIN


ஓடி விளையாடச் சொல்லி, ஒற்றுமையாய்க் கூடச் சொல்லி - நம்மைப் 
பாடி மகிழ வைத்தார் பாரதி! - தமிழ்ப் 
பாரதத்தில் ஏறி வந்தார் பாரதி!

அடிமை விலங்கொடிக்க, ஆண்மையோடு நிற்க வைத்து - நமக்குப்  
படி அமைத்துப் பாதை போட்ட பாரதி! - வெற்றிப் 
பாரதத்தைச் செதுக்கி வைத்த பாரதி!

சாதி, சமயச் சழக்கறுத்து, சமத்துவத்தின் நெறியுரைத்து - பொது 
நீதி சொல்லி நிமிர வைத்த பாரதி! - அந்த 
நீலவானாய்ப் பரந்தொளிர்ந்த பாரதி!

பாஞ்சாலி சபதமென்று, குயில் பாட்டு, கண்ணன் பாட்டாய் - செழும் 
பூஞ்சோலை நமக்களித்த பாரதி! - கிழக்கில் 
புத்தொளியார் எழுந்த கதிர் பாரதி!

சுதந்திரத்தாய், மனம் குளிர "வந்தே மாதரம்!'  என்று 
தேசமக்கள் முழங்க வைத்த பாரதி! - தமிழ்த் 
தென்றலாக நம்மை ஆளும் பாரதி! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.