தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடி

""காய்கறி வாங்க சென்னையில் இருந்து கோயம்புத்தூர் எதுக்குப் போன?''""அம்மா தான் "கோவைக்காய்'வாங்கிட்டு வரச்சொன்னாங்க!''

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

""காய்கறி வாங்க சென்னையில் இருந்து கோயம்புத்தூர் எதுக்குப் போன?''
""அம்மா தான் "கோவைக்காய்'வாங்கிட்டு வரச்சொன்னாங்க!''


நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.


""எங்கப்பா ஆஃபீஸ்ல எல்லோரும்உற்சாகமாக வேலை செய்யணும்னு ஒரு கண்டிஷன்தான் போட்டாரு! எல்லோரும்உற்சாகமாயிட்டாங்க....''
""என்ன கண்டிஷன் ?''
""ஏர் கண்டிஷன்தான்!''


எம்.அசோக்ராஜா,
திருச்சி- 600015.

""ஏன் "நச்,...நச்,... நச்,...நச்' னு நாலு வரிக்கு அதையே திரும்ப திரும்ப எழுதி
இருக்கீங்க?"
""நீங்க தானே, ‘நச்'னு நாலு வரி எழுதச் சொன்னீங்க?''


இர.கிருத்திக்குமார்,
நெய்வேலி - 607803.

""நாய்க்கு நாம பேசறது தெரியுமாடா?''
""எனக்கு தெரியாதுடா!''
""நான், நாய்க்கு தெரியுமான்னு தான்டா கேட்டேன்! ‘'


வி. ரேவதி,
தஞ்சை - 613 007.

""என்னடா இது.....உதவிப் பேராசிரியரைப் போயி "ஆஸ்ப்ரோ'ன்னு சொல்றே ?
""அட நீங்க வேற, அஸிஸ்டன்ட் பிரொஃபசரை, ஷார்ட்டா, "ஆஸ்ப்ரோ' ன்னு
சொன்னேன்?''

எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

""இந்த ரெண்டு விட்டில் பூச்சிகளில் ஒரு பூச்சி சின்னதா இருக்குடா!''
""அப்போ அதை லிட்டில்(ப்ண்ற்ற்ப்ங்) பூச்சினு சொல்லு!''

ச.ஷகிலா பானு,
தூத்துக்குடி--628001.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.