தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒளிரும் ஆசிரியர்!

பள்ளிக் கூடம் பால னாகப் போனபோது நம்மிடம் பரிவு காட்டி உறவு கொண்டார்

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

அழகு . இராமானுஜம்

பள்ளிக் கூடம் பால னாகப் 
போனபோது நம்மிடம் 
பரிவு காட்டி உறவு கொண்டார்
எங்கள்  வகுப்பு வாத்தியார்!

உள்ளம் மகிழப் பாடம் நடத்தி 
நம்மில் தமிழை வளர்த்திட்டார்!
ஒன்று, இரண்டு எண்கள் கொண்டு 
கணிதம் பயிலச் செய்திட்டார்!

கடிந்திடாமல் நயந்து பழகிக் 
கதைகள் பலவும் உரைத்திட்டார்!
கசடில்லாமல் கல்வி நல்கக் 
கடுமையாக உழைத்திட்டார்!

விடியும் பொழுதின் வெள்ளி போல 
வானில் ஒளிரும் ஆசிரியர்!
விரிந்த உலகில் இருக்கும் வரையில் 
அவரை மறத்தல் இயலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.