அங்கிள் ஆன்டெனா
புகைவண்டி (ரயில்) தண்டவாளத்தில் ஓடுகிறது. தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் இருக்கிறதாமே? உண்மையா?


புகைவண்டி (ரயில்) தண்டவாளத்தில் ஓடுகிறது. தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் இருக்கிறதாமே? உண்மையா?
பதில்: தண்டவாளமே இல்லாத ரயில் இருக்கிறது என்பது உண்மைதான். அண்மையில் சீனாவில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக தண்டவாளம் இல்லாத புதிய ரக தொடர்வண்டியை சீனா வடிவமைத்துத் தயாரித்துள்ளது. சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள சூ சோ நகரில் இந்தப் புதிய தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (படத்தில் இதைப் பாருங்கள்)
இதை ரயில் என்றே அழைக்கலாம். ரயிலைப் போலவே தொடர் பெட்டிகளைக் கொண்டுள்ளது.
சாலையில் வாகனம் போன்று இந்தத் தொடர்வண்டி இயங்கும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 307 பேர் பயணிக்கலாம், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது. இது இயங்கும் போது இதற்கென்று தனியாக தண்டவாளங்கள் ஏதும் கிடையாது. சாலையில் பேருந்து போல இது செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...