தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எறும்பும் கூட்டுப் புழுவும்!

வெல்லக்கட்டியிலிருந்து ஒரு துளையை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது ஓர் எறும்பு. வழியில் ஒரு கூட்டுப் புழுவைப் பார்த்தது!. கூட்டுப் புழுவின் வால் லேசாக அசைந்து கொண்டிருந்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

மாதவி

வெல்லக்கட்டியிலிருந்து ஒரு துளையை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது ஓர் எறும்பு. வழியில் ஒரு கூட்டுப் புழுவைப் பார்த்தது!. கூட்டுப் புழுவின் வால் லேசாக அசைந்து கொண்டிருந்தது. அதை எறும்பு ஆச்சரியத்துடன் பார்த்தது. ""அடேங்கப்பா உயிர் இருக்கிறது போலிருக்கே!'' .... என்று நினைத்த எறும்பு, தன்னை அந்தக் கூட்டுப் புழுவுடன் ஒப்பிட்டு கர்வத்துடன் பேசியது!
""ம்.... என்னைப் பார்!.... நான் எவ்வளவு ஜாலியாக வெல்லக்கட்டியைத் தூக்கிக்கொண்டு சுறுசுறுப்பா நடக்கிறேன்.... உன்னாலே முடியுமா?.... நான் என் இஷ்டப்படி எந்த உயரத்திற்கும் ஊர்ந்து போயிடுவேன்!.... உன்னைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!.... நீ பாவம்!... கூட்டுக்குள்ள இருந்துக்கிட்டு வாலை மாத்திரம் ஆட்டுகிறாய்!.... உனக்கு வால் மாதிரிதான் உடம்பே இருக்கு!.... ரொம்பக் கேவலமான பிழைப்பு உனக்கு!.... ''
கூட்டுப் புழு எதுவும் பதிலளிக்கவில்லை... அமைதியாக, பொறுமையுடன் இருந்தது.
சில நாள்கள் சென்றன. ஒரு நாள் ஓர் அரிசியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தது எறும்பு! அப்போது மிக அழகாக ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடித்துக்கொண்டு எறும்பின் முன்னே வந்து நின்றது. எறும்பு திகைத்தது! அதன் அழகைப் பரவசமாகப் பார்த்தது!
""என்ன?.... என்னை அடையாளம் தெரியலையா?.... கொஞ்ச நாளைக்கு முன்னாலே என்னைப் பார்த்துக் கிண்டலாகப் பேசினாயே!.... அந்தக் கூட்டுப் புழு நான்தான்!.... இப்போ உன்னைப் பார்த்தால்தான் எனக்குப் பரிதாபமா இருக்கு!.... சும்மா ஊர்ந்து, ஊர்ந்து மேலேயும், கீழேயும் போய்வர்றதைத் தவிர உனக்கு என்ன தெரியும்?.... என்னைப் பார்!.... அழகான வண்ணம் நிறைந்த சிறகுகள்! நான் அமைதியா கூட்டில் காத்திருந்தேன்!.... பொறுமையுடன் தவமிருந்தேன்! இப்போது பார்த்தாயா? நான் அழகானவளா மாறிட்டேன்! இப்போது எங்கு வேண்டுமானாலும் நான் பறக்க முடியும்!.... வண்ண, வண்ண மலர்களை ரசித்துக்கொண்டு அவற்றில் அமர முடியும்!.... அவற்றிலிருந்து கிடைக்கும் தேனை ருசி பார்க்க முடியும்!.... நான் வருகிறேன்!.... எனக்காக மலர்கள் நந்தவனம் பூராகக் காத்திருக்கின்றன. '' என்று கூறிவிட்டுப் பறந்து சென்றது பட்டாம்பூச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.