தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடி

""என்னது உங்க சேவல் விசிலடிக்குது?""அதுவா?.... அது விசிலை வாயிலே கொத்திக்கிச்சு!....''

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 5:09 pm

தினமணி


""என்னது உங்க சேவல் விசிலடிக்குது?
""அதுவா?.... அது விசிலை வாயிலே கொத்திக்கிச்சு!....''

ஆர்.எம். ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

""எங்ககிட்டே ரெண்டு பசுமாடு இருக்கு!.... ரெண்டுமே நல்லா பால் கறக்கும்!''
""ஆச்சரியமா இருக்குடா!.....  ரெண்டு மாட்டுக்கும்  பால் கறக்க கத்துக் 
குடுத்திருக்கீங்களா?''

நா.வினோத்குமார்,
 பாராஞ்சி, அரக்கோணம் - 632510.

""ஒரு நாள்கூடத் தவறாம அவர்  "வாக்' போவாரு''
""..."வாக்'  தவறாதவர்னு சொல்லு!''

டீ.என்.பாலகிருஷ்ணன்,
சென்னை.

""எதுக்குடா மாடிப்படிக்கட்டை பார்த்துக்கிட்டே இருக்கே?''
""அடிபட்ட இடத்தை நல்லாப் பார்த்துக்கோன்னு பாட்டி சொன்னாங்க!''

நா.வினோத் குமார், பாராஞ்சி.

""உன் தங்கச்சியை ஏன் திட்டறே?''
""வாழைப்பூவைத் தலையிலே 
வெச்சுவிடணும்னு அடம் பிடிக்கிறாள்!''

ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.

""நான் தோசை செய்தேன்!''
""நிஜமாவா?''
""தோசை மாவுலேதான் செஞ்சேன்!.... 
நிஜமாவுன்னு ஒரு மாவு இருக்கா என்ன?....""

ம.செ.மயில்,
திருநெல்வேலி டவுன் - 627006.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.