நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உழைக்க வேண்டுமே!

சிட்டுக் குருவி கூடு கட்டி முட்டை இட்டதாம்!சிரத்தையோடு அதிலே குந்தி 

News image
Updated On :27 பிப்ரவரி 2021, 12:30 am

புலேந்திரன்


சிட்டுக் குருவி கூடு கட்டி 
முட்டை இட்டதாம்!
சிரத்தையோடு அதிலே குந்தி 
அடையும் காத்ததாம் 

பட்டு மேனி குட்டி மூக்கு 
குஞ்சு பொரித்ததாம்!
பாசத்தோடு அம்மா சிட்டு 
அணைத்தக் கொண்டதாம்!

சிறகு முளைக்கா சிட்டுக் குஞ்சு ம்
கூட்டில் இருந்ததாம்!
சென்று இரையைத் தேடி வந்தே 
அம்மா கொடுத்ததாம்!

சிறகு முளைத்த குஞ்சு சும்மா 
குந்தி இல்லையாம்!
சிறகை விரித்து இரையைத் தேடிப் 
பறந்து சென்றதாம்!

தம்பி, தங்கை, பெற்றோர் உங்களைப் 
பேணி வளர்க்கவே 
தாளா நிலையிலும் ஓயா துழைப்பதை
நினைவில் கொள்ளணும்! 

நன்கு வளர்ந்து உரிய வயதை 
அடையப் பெற்றதும்
நாளும் சென்றே உழைத்துப் பொருளைத் தேட வேண்டுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.