

அன்னைத் தமிழை, அறிவியலை,
ஆங்கி லத்தை, கணிதத்தை,
மன்னர் ஆண்ட வரலாற்றை,
மற்றும் புவியின் இயல்புகளை
இன்னும் பலவாம் பாடத்தை
எளிமையாகக் கற்பித்து
நின்னை உயர்த்தும் ஆசானை
நித்தம் போற்றல் உன் கடமை!
எண்ணும் எழுத்தும் ஈத்துவக்கும்
இறைவன் இங்கு அவரன்றோ?
பண்பும் அன்பும் போதித்துப்
பலரை வாழ்வில் உயர்த்திடுவார்!
ஒழுக்கம் நிறைந்த சமுதாயம்
உலகில் என்றும் நிலைத்திருக்க
அழுத்தமான அறிவுரையால்
ஆசான் வழியைக் காட்டிடுவார்!
கண்ணின் மணிபோல் மாணவரைக்
காக்கும் கருணைக் கடவுளவர்!
மண்ணில் ஆசான் மாண்புதனை
மனதில் வைத்துப் போற்றிடுவீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டிற்கு குருகிராம் மாநகராட்சி ஒப்புதல்

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

