மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

மனித தெய்வம்!

பாடம் சொல்லித் தருவார்படிக்கச் சொல்லிக் கேட்பார்!தேடும் அறிவைப் பெருக்கித் 

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:00 am IST

பாடம் சொல்லித் தருவார்
படிக்கச் சொல்லிக் கேட்பார்!
தேடும் அறிவைப் பெருக்கித் 
திறனை வளரச் செய்வார்!

கல்விச் சேவை செய்து 
காக்கும் மனித தெய்வம்!
உள்ள இருளைப் போக்கி
ஒளிர வைக்கும் நெஞ்சம்!

நல்ல வழிகள் காட்டி
நடக்கச் செய்து மகிழ்வார்!
வல்ல பாதை தன்னில் 
வாகை சூட்டி நெகிழ்வார்!

மனத்தில் நேர்மை ஒழுக்கம் 
மலரச் செய்து பார்ப்பார்!
குணத்தில் மேலோன் ஆக்கும்
கொள்கை தன்னை ஆர்ப்பார்! 

 மதிப்பை உயரச் செய்வார்!- அவரைத்
துதித்துப் போற்றி வாழ்வோம்!- அவர் 
வழியில் நாமும் செல்வோம் 
வாழ்வில் வெற்றி கொள்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.