போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அங்கிள் ஆன்டெனா

வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?இந்த மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

News image
Updated On :5 ஜூன் 2022, 2:32 pm

தினமணி


வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?

இந்த மேகங்கள் காற்றினாலும் நீரினாலும் ஆனவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நிலையில் இருக்கும் மேகத்தில் குட்டிக்குட்டியான நீர்த்திவலைகள் கோடிக்கணக்கில் இருக்கும். சூரியனின் வெளிச்சக் கதிர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதாவது ஒளி எப்போதுமே பளிச்சென்று வெண்மையாக இருக்கிறது.

இந்த வெளிச்சக் கதிர்கள் மேகத்திலுள்ள நீர்த்திவலைகளில் பட்டவுடன் அந்த நீர்த்திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்து விடுகின்றன. 

அவ்வளவு நீர்த்திவலைகளும் வெளிச்சத்தை ஒன்றாகச் சேர்ந்து பிரதிபலிக்கும்போது அந்த மேகம் நமக்குப் பார்ப்பதற்கு வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.