கொஞ்சு மழலையின் கொவ்வைக் கனியிதழ்க்
கொட்டுஞ் சிரிப்பினைப் பார்- அது
பிஞ்சு விரல்களால் நெய்யுடைச் சோற்றினைப்
பிசைந்து உதிர்ப்பதும் பார்!
தவழ்ந்தும் விழுந்தும் எழுந்தும் வருஞ்சிறு
தளிருடல் குழந்தையைப் பார்- நெஞ்சங்
கவர்ந்து நமையது மகிழ்ச்சியின் உச்சியில்
களிப்புறச் செய்வதும் பார்!
தத்தித் தளர்நடை யிட்டு வருகையில்
தவறி விழுவதும் பார்- அது
தொத்துங் கிளியென அன்னையின் தோள்களில்
தூங்கிக் கிடப்பதும் பார்!
"அம்மா" எனமிகு அன்புடன் தாயினை
அழைத்துச் சிணுங்குதல் பார்- அட
இம்மாநிலத்தினில் குழந்தைக்கு வேறோர்
ஈடுண்டு என்பவர் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
தொகுதி அறிமுகம்: நாகப்பட்டினம்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA

தருமபுரியின் 5 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?
வீடியோக்கள்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

