வாழ்க்கைச் சுவைகள்

கரும்பு போல இனிமையாகப்    பேச கற்கணும் - பாகல்கசப்பைப் போல பேசுவோர்பால்    பழக மறுக்கணும்!
வாழ்க்கைச் சுவைகள்

கரும்பு போல இனிமையாகப்
    பேச கற்கணும் - பாகல்
கசப்பைப் போல பேசுவோர்பால்
    பழக மறுக்கணும்!

தீமை செய்யும் பேர்களிடத்தில்
    மிளகாய் ஆகணும்- நாம்
உப்பைப்போல உறவு கொண்டே
    உயிரும் வாழணும்!

புதிய புதிய அறிவியல் செய்தியைப்
    புரட்டிப் பார்க்கணும் - வாழ்க்கைப்
புதரில் புளிப்பு இல்லாதாக்கப்
    புதுமை செய்யணும்!

உவப்புக் கொண்டே உண்மையறிந்து
    உயர்ந்து சிறக்கணும் - வாழ்வில்
உவர்ப்பு நீக்கி உலவுகின்ற
    வாழ்க்கை அமைக்கணும்!

அறுசுவை வாழ்வில் கலந்திருக்கு
    அறிவாய்ச் சுவைக்கணும்- நாம்
விரும்பும் சுவையை வாழ்வில் என்றும்
    சுவைத்து வாழணும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com