கேள்வி நேரம்

நெதர்லாந்து நாட்டு கரன்சியின் பெயர்' கில்டர்.
கேள்வி நேரம்


நெதர்லாந்து நாட்டு கரன்சியின் பெயர்' கில்டர்.

ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் பெயர்' ரிக்ஸ்டாக்.

எத்தியோப்பியாவின் தேசிய மொழி' அம்ஹாரிக்.

 சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகளுக்கு "ரோùஸட்ஸ்' என்ற பெயர் உண்டு.

"பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான்'  என்ற பெயரில் 1770'இல் இந்தியாவில் முதன்முதலில் வங்கி தொடங்கப்பட்டது.  அலெக்ஸாண்டர் நிறுவனத்தால்! கொல்கத்தாவில் ஐரோப்பிய நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பேங்க் ஆஃப் பெங்கால் (1806), பேங்க் ஆஃப் பம்பாய் (1840),  பேங்க் ஆஃப் மெட்ராஸ் (1843) ஆகிய மூன்றும் மாகாண வங்கிகள் என்று அழைக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாண முதல்வராக கிறிஸ்மின்ஸ் அண்மையில் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் உள்ள 6 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் டேனியல் முகே வருவாய்த் துறை அமைச்சராகப்  பதவியேற்றுள்ளார். இவரது பெற்றோர் பஞ்சாப்பில் இருந்து 1973'இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் வரைபட அமைப்பானது ஆக்டோபஸ் போல இருப்பதால், இதை "ஆக்டோபஸ் நகரம்' என்று அழைக்கின்றனர்.

கொச்சி விமான நிலையம் 45 ஏக்கரிலில் சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மின் உற்பத்தித் திறன் 12 மெகாவாட். உலகிலேயே முதலில் சூரிய மின்சக்தியில் இயங்கும் விமான நிலையம் இதுவேயாகும்.

மனித உடலில் உள்ள ரத்தம் ஓட்டம் குறித்து ஆராய்ந்தவர் வில்லியம் ஹார்வி. ஆனால் இவருக்கு ஆராய்வதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே மனித உடல்கூறு குறித்து ஆராய்ந்து ரத்த ஓட்டப் பாதையை ஓவிய
மாகத் தீட்டியவர்  லியனார் டோடாவின்ஸி.

இஸ்ரேல்' ஜோர்டான் எல்லைப் பகுதியில் உள்ள சாக்கடல் என்ற "டெட்ஸீ' கடலில் நீச்சல் தெரியாதவர்கள் கூட தைரியமாக இறங்கலாம். இந்தக் கடலில் மூழ்காமல், மிதந்து கொண்டே இருப்போம்.  அதிக அளவில் உப்பு  இருப்பதால், எந்த உயிரினமும் இதில் வாழ்வதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com