சிறுவர் கதை... புலியும் நீலனும்...

அந்த அடர்ந்த வனத்தில் ஒரு புதரில் அசைவுச் சத்தம் கேட்டதால், அங்கு வயதான புலி பாய்ந்தது.  அங்கிருந்த சிறு விலங்கு ஓடிவிட்டது.

அந்த அடர்ந்த வனத்தில் ஒரு புதரில் அசைவுச் சத்தம் கேட்டதால், அங்கு வயதான புலி பாய்ந்தது.  அங்கிருந்த சிறு விலங்கு ஓடிவிட்டது. புலியின் முன் கால் இரண்டிலும் சில முள்கள் குத்தியதால், வலி பொறுக்க முடியாமல் புலி படுத்துவிட்டது.  

புலியின் முனகல் சத்தம் கேட்டு, ஒரு முள்ளம்பன்றி அங்கு வந்தது.  புலியின் காலில் இருந்த முள்ளை எப்படி எடுப்பது என்று முள்ளம்பன்றி யோசித்தது.  "போய்விடு' என்பது போல், புலியின் முன் கால்களை அசைத்தது. 

அப்போது அங்கு மான் ஒன்றும் வந்து, "புலி கொன்று விடுமே' என்ற அச்சம் இருந்தாலும் காப்பாற்றும் நோக்கில் சென்று திரும்பிவிட்டது. இந்த நேரத்தில் மரக்கிளையில் இருந்து குரங்கு ஒன்றும் இறங்கி வந்து, புலியின் அருகில் சென்றது. புலி அசைந்தவுடன் குரங்கு பின்வாங்கியது. ஆனால் புலி பெரும் கூச்சலிட்டது.

இந்தச் சத்தம் கேட்ட ஆதிவாசி சிறுவன் நீலன் அருகே வந்தான். குரங்கும் புலியும் அருகருகே இருந்தன.

ஒரு பச்சிலை பறித்துவந்து,  முள் குத்திய இடங்களில் தடவினான்.  பின்னர், தன் தலையில் கட்டியிருந்த துண்டைக் கிழித்து, காயம் பட்ட இடத்தில் கட்டினான். தண்ணீர் கொண்டு வந்து, புலி மீது தெளித்தான். புலி மெல்ல அசைந்து எழ முயன்றது. அங்கிருந்து சிறுவன் சென்றுவிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com