தெரியுமா...?

உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட நாடு சீனா.
தெரியுமா...?

உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட நாடு சீனா. அவையாவன:கஜகிஸ்தான், ரஷ்யா, கைரஜிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம்,பூடான், மியான்மர், லாவேரஸ், வியத்நாம்,  வடகொரியா, மங்கோலியா ஆகிய 14 நாடுகள்தான்.

உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் திருட்டு போகும் நாடு-  நெதர்லாந்து. ஆம்ஸ்டர்படம் நகரில் மட்டும் 8 லட்சத்துக்கு 81 ஆயிரம் சைக்கிள்கள் உள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் சைக்கிள்கள் அதிகம், அந்த மாநிலத்தில் 78.9 சதவீத வீடுகளில் சைக்கிள்கள் உள்ளன.

மலைக்கள்ளன் படத்துக்கு அதே பெயரில் வந்த நாவல் தான் காரணம்.  அந்த நாவலை உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தபோது,  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதினார்.

திரைப்படத் துறையினரைத் தவிர்த்து, முன்னாள் முதல்வர் காமராஜருக்காக 'ராஜபார்ட் ரங்கதுரை -  என்ற படம் சிறப்புக் காட்சி முதன்முறையாகத் திரையிடப்பட்டது.

- ராஜி ராதா 

வயதான கழுகு தன்னுடைய ஒரு பக்கத்தில்  ஒரு இறக்கையை உதிர்த்தால் இன்னொரு பக்கத்திலும்  ஒரு இறக்கையை உதிர்க்கும். ஏனெனில், இரு பக்கங்களிலும் 'பேலன்ஸ்-  செய்து பறக்க வசதியாகவே இருக்கும் அல்லவா?

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஓர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா வித்தியாசமாகவே இருந்தது.  இதில், பட்டம் பெற்றவர்களில் 12 இரட்டையர்கள், ஒரு மூவர் அடங்குவர். 

உலகப் புகழ் பெற்ற ஐ.பி.எம். கணினி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர்  15 ஆண்டாகத் தனக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.  2008- ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்ததில் இருந்தே மருத்துவ விடுப்பில் இருந்திருக்கிறார்.  அதனால், 2013- இல் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.  ஓய்வு அளிக்கப்பட்டாலும், தனக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். இது எப்படி இருக்கு?


இன்று பிரபலமாகியிருக்கும் 'ஸ்டாண்ட் அப்-  காமெடி 15- ஆவது நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. அப்போதே அரசர்களையும் அமைச்சர்களையும் கேலி செய்து  காமெடி அரங்கேறியதற்கான ஆதாரத்தை கேம்பிரிட்ஜ் பல்கலை.  பேராசிரியர் ஜேம்ஸ் வேடு என்பவர் வெளியிட்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com