அங்கிள் ஆன்டெனா:  உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்!

உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்!
அங்கிள் ஆன்டெனா:  உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்!

அங்கிள் ஆன்டெனா:  உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்!

கேள்வி: உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்.

பதில்:   அமெரிக்க டாலர் அல்லது பிரிட்டனின் பவுண்ட்தான் உலகில் மிகவும் அதிக மதிப்புள்ள நாணயங்கள் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. நாணயங்களின் மதிப்பு அடிக்கடி கூடும் அல்லது குறையும். 

இந்த ஆண்டு மே 20-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி,  குவைத் அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடு.  ஆகவே, உலகில் மிகவும் செல்வமான நாடுகளில் ஒன்று குவைத். இந்த நாட்டின் நாணயத்தின் பெயர் தினார். இந்த தினார்தான் உலகின் மிக அதிக மதிப்புள்ள நாணயமாகப் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்திய ரூபாய்கள் சுமாராக 76 கொடுத்தால்தான் ஒரு டாலர் கிடைக்கும். அதாவது ஒரு டாலரின் மதிப்பு 76 ரூபாய்கள். சரி, டாலருக்கே இவ்வளவு ரூபாய்கள் கொடுக்க வேண்டியிருக்கிறதே, இந்த டாலருக்கு எத்தனை தினார்கள் (குவைத் நாட்டு நாணயம்) கொடுக்க வேண்டும் என்று  நினைக்கிறீர்கள்? 

ஏறக்குறைய மூன்றே கால் டாலர்கள் (3.24) கொடுத்தால்தான் ஒரு டாலர் கிடைக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பு அவ்வளவுதான்.  குவைத் தினாருக்குப் பிறகு பஹ்ரைன்,  ஓமன் மற்றும் ஜோர்டான் நாட்டின் தினார்களும் மதிப்பு மிகுந்தவை. அதாவது வரிசைப்படி பார்த்தால் குவைத், பஹ்ரைன், ஓமன் தினார்கள் மதிப்பு மிகுந்தவை. அதன்பிறகு இங்கிலாந்தின் பவுண்ட்.  இந்த நாணய மதிப்பு வரிசையில் அமெரிக்க டாலர் 9-வது இடத்தில்தான் இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com