தெரிந்து கொள்ளுங்கள்...

ரயில் பெட்டிகளின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக?இந்தியாவில் 1853-ஆம் ஆண்டில்தான் ரயில் சேவை துவங்கப்பட்டது.
தெரிந்து கொள்ளுங்கள்...

ரயில் பெட்டிகளின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக?
இந்தியாவில் 1853-ஆம் ஆண்டில்தான் ரயில் சேவை துவங்கப்பட்டது.  1951-ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் ரயில் துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இப்படி ஒருநாள் வந்த மாற்றம்தான் மஞ்சள் நிறக் கோடுகள்.

விரைவு வண்டிகள், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிற ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும்.

இந்த நீலநிற பெட்டியில்  கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வுத் கோடுகள் இருக்கும். இந்தக் கோடுகள் இருந்தால் அந்தப் பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்று அர்த்தம்.  முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்தக் கோடுகள் இருக்காது. முன்பதிவில்லாத பெட்டியை பயணிகள் எளிதாகக் கண்டுபிடிக்கவே கோடுகள் போடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com