தெரியுமா?

உலகிலேயே மிகச் சிறிய நாடு வாடிகன் சிட்டி.  இது 1929-இல் தனி நாடானது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியும், போப் ஆண்டவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, தனி நாடானது.
தெரியுமா?


உலகிலேயே மிகச் சிறிய நாடு வாடிகன் சிட்டி.  இது 1929-இல் தனி நாடானது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியும், போப் ஆண்டவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, தனி நாடானது.  இந்த நாட்டில் வறுமை, அரசியல், எல்லைப் பிரச்னை எதுவும் கிடையாது.

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை ஆர்தன்காட்டன் என்பவரால் 1837-ஆம் ஆண்டில் தண்டவாளம் அமைக்கப்பட்டு, 'ரெட்ஹில்ஸ் ரயில்வே' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் செப். 12-இல் முதலில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் ஓடிய முதல் ரயில்.

சென்னையில் உள்ள 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்பதே நாட்டிலேயே மிகவும் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாகும்.  இந்த ரயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் வரை ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'வெங்கடநரசிம்ம ராஜூவாரிபேட்டா ரயில் நிலையம்தான்' மிகப் பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையமாக இருந்தது. மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் - 'இப்'.  இது ஒடிஸ்ஸா மாநிலத்தில் உள்ளது.

பிரிட்டனில் 1834-இல் வில்லியம் கூப்பர் என்பவரால் கூட்டுறவு அங்காடி உருவாக்கப்பட்டது.  இதுதான் உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அங்காடியாகும்.

நிலப்பகுதியில் மட்டுமல்ல; கடலில் மலைத்தொடர்புகள் உள்ளன. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மலைத்தொடரில் 
உள்ளது. இதன் நிலம் 650 முதல் 800 மைல். 

உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா பால்டிக் கால்வாய். இதன் நீளம் 368 கி.மீ. ஆகும்.  வோல்கா நதியையும் பால்டிக் கடலையும் இணைக்கும் கால்வாய்.  இது ரஷியாவில் உள்ளது. 

உலகில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை 529. இதில் அமெரிக்காவில் மட்டும் 120 அணுஉலைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com