வகுப்பறை அலப்பறை...

'உண்மையான தமிழன் யாரு?'' 'இங்கிலீஷில் பெயில் ஆகிறவன்தான் சார்...?''
வகுப்பறை அலப்பறை...
Published on
Updated on
1 min read

'உண்மையான தமிழன் யாரு?''

'இங்கிலீஷில் பெயில் ஆகிறவன்தான் சார்...?''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'நான் கஷ்டப்படுற பசங்களுக்கு டியூஷன் சொல்லி தர்ற பீúஸ வாங்க மாட்டேன்...''

'அப்போ என் பையனுக்கும் சொல்லி கொடுங்க சார்.. அவனும் படிப்பு வர்றாம கஷ்டப்படுறான்...''

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை...?''

'கொடைக்கானல் வளர்க்கும் சார்...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'பஸ் ஒன்று வந்தது. 9 யானைகள் ஏறிவிட்டன. ஒரு யானை ஏறவில்லை.. ஏன்?''

'அது ஆண் யானை சார்.. வந்தது லேடீஸ் பஸ் சார்...''



'மரமே இல்லாத காடு பெயர் சொல்லுங்க?''

'சிம்கார்டு சார்...''



'எறும்பு பெரிசா..?, யானை பெரிசா..?''

'பிறந்த தேதி தெரியாமல் சொல்றது கஷ்டம் சார்...?''



'அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்...?''

'வயதுதான் சார்...?''



'என் பையன் இவ்ளோ மார்க் எடுப்பான்னு நினைச்சுகூட பார்க்கலை..?''

'அடுத்து என்ன செய்யப் போறே..?''

'ரெண்டாம் கிளாஸ்தான்...?''



'பரீட்சைக்கு நீ நல்லா படிக்காம, யாருக்கோ போன் பண்ணி நல்லா படின்னு சொல்றீயே?''

'எனக்கு முன்னாடி உட்கார்ந்து பரீட்சை எழுதப் போறவனுக்குதான்பா?''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com