

கோடி கோடி கதிர்கள் வீசி
கிழக்கில் எழுங்கதிரவா!
பாடிப் பாடிப் புகழ்வோம் உன்னைப்
பொங்கல் இந்த நாளிலே!
உமது கதிர்கள் இல்லை என்றால்
உலகில் இல்லை எதுவுமே!
எமது புவியில் என்றும் ஒளிரும்
அகிலத் தீபம் நீயுமே!
கோள்கள் எல்லாம் உன்னைச் சுற்றிக்
களிப்பாய் விண்ணில் இயங்குமே!
நாள்கள் ஆறும் ஞாயிறு உன்னை
நிழலாய்ப் பின்னே தொடருமே!
உன்னை வணங்கும் உயிர்கள் எல்லாம்
வலிமை பொலிவு அடையுமே!
அன்றும் இன்றும் அகிலம் காக்கும்
உன்னைத் துதித்து மகிழ்வோமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.