திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு! திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்

மேன்மை மயிலே...

வான வில்லின் நிறங்கள் தோகையில் மின்னும் மயில்

Published On :22 ஜூன் 2024, 10:08 pm IST

தோகை விரித்து என்முன் இங்குத்

துள்ளும் மயிலே!

வேக மாக நடனம் ஆடும்

விந்தை மயிலே!

வான வில்லின் நிறங்கள் எல்லாம்

வாழ்த்தும் மயிலே!

தானம் செய்யும் வள்ளல் போல

தோன்றும் மயிலே!

நூறு கண்கள் தோகை கொண்ட

நட்பு மயிலே!

மாறு கின்ற நிறங்கள் கழுத்தில்

மின்னும் மயிலே!

கருப்பு மேகம் கண்டே மகிழ்ச்சி

கொண்ட மயிலே!

விருப்ப மழைக்கு வணக்கம் சொல்லி

வாழ்த்தும் மயிலே!

பறவை களுக்கே அரசி யான

புனித மயிலே!

உறவைத் தேட ஆட்டம் ஆடி

ஓய்ந்த மயிலே!

இயற்கை அழகே! துள்ளும் கலையே!

இன்ப மயிலே!

மயக்கும் பாட்டே! மனதில் நிலைத்த

மேன்மை மயிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.