'ஏன்டா? ஜோதியைத் தூக்கிட்டு ஓடுறே..?''
'விளையாட்டுப் போட்டியிலே ஜோதியைத் தூக்கிட்டு ஓட சொன்னாங்க.. அதான்..?''
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'எல்லா பாடத்திலேயேயும் கம்மியா மார்க் .. முன்னாடி உட்கார்ற பையன் பேப்பரை பார்த்து எழுத வேண்டியதுதானே..?''
'எனக்கு கிட்டப் பார்வை இருக்கே.. மம்மி...'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'டீச்சர் அடிச்சாங்களா.. ஏன்டா.. தப்பா சொன்னியா?''
'அவங்க சொன்னது தப்புன்னு சொன்னேன்...''
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'நான் வகுப்பு எடுக்கறது ரொம்பவே பிடிக்கிருக்கா...? ஏன்டா..?''
'உடனே தூக்கம் வருதே சார்...''
-எம்.சுப்பையா, கோவை.
'ராமு... இரவும் பகலும் மாறிமாறி வர்ற என்ன காரணமுன்னு சொல்லு...?''
'தொடர்ந்து பகலாகவே இருந்தால் சூரியன் சீக்கிரமே எரிஞ்சி சாம்பலாயிடும் சார்.. அதான்..''
-அ.செந்தில்குமார், சூலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.