
ஒன்றும் ஒன்றும் இரண்டு
நன்றாய் படித்தால் பயனுண்டு
இரண்டும் ஒன்றும் மூன்று
முரண்டு பிடித்தல் வேண்டாம்
மூன்றும் ஒன்றும் நான்கு
வேண்டும் என்றும் மாண்பு
நான்கும் ஒன்றும் ஐந்து
நல்லதை நினைத்தால் ஜெயமே
ஐந்தும் ஒன்றும் ஆறு
வியந்து வாழ்த்து நேர்மையை
ஆறும் ஒன்றும் ஏழு
நேர்வழி நடப்பதே மேலாம்
ஏழும் ஒன்றும் எட்டு
நாளும் வெற்றியை எட்டு
எட்டும் ஒன்றும் ஒன்பது
கெட்டிக் காரணாய் வாழ் நண்பா
ஒன்பதும் ஒன்றும் பத்து
நண்பர் களேனும் சொத்து!