இதயம் நிறைய அன்பிருந்தால்
இன்சொல் தானே வெளிவருமே!
விதையின் உள்ளே உயிர்ப்பித்திருந்தால்
முளைத்து நலமாய் வளர்ந்திடுமே!
காம்பில் ரோஜா அரும்பிருந்தால்
காலை வேளை பூத்திடுமே!
கூம்பிக் குமுத- மொட்டிருந்தால்
குளிரும் இரவில் விரிந்துடுமே!
பசுவின் கன்று அருகிருந்தால்
பால்தான் மடியில் சுரந்திடுமே!
இசைந்த பாட்டைக் கேட்டதுமே
இன்பத் தலையும் அசைந்தாடும்!
காகம் உண்ணச் சோறிட்டால்
கரைந்து கூட்டம் சேர்ந்திடுமே!
மேகம் கருத்து மின்னலிட்டால்
மழையும் பின்பு பொழிந்திடுமே!