சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அதல பாதாளம்..!

உலகிலேயே மிக உயரத்தில் (அதாவது கடல் மட்டத்திலிருந்து 8,849 மீ.) உள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியே மக்கள் பெரிதும் பேசுவர்.

Published On :

உலகிலேயே மிக உயரத்தில் (அதாவது கடல் மட்டத்திலிருந்து 8,849 மீ.) உள்ள எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியே மக்கள் பெரிதும் பேசுவர். அதில் ஏறி உச்சியைத் தொட்டுச் சாதிக்க எண்ணற்றோர் துடிக்கின்றனர். இதற்காக உயிரையும்கூட துச்சமாய் நினைப்போர் உண்டு. ஆனால், உலகில் மிக தாழ்வான பகுதிகள் குறித்து யாரும் பேசுவதில்லை. உலகின் தாழ்வான பத்து இடங்களை அறிவோம்.

சாக்கடல், ஜோர்டான்: இஸ்ரேல் பகுதியில் உள்ள இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 440 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

அஸ்ஸால் ஏரி, ஜிபூட்டி: கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 155 மீ. கீழே உள்ளது.

துர்பான் பண்டி, சீனா: சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 154 மீ. ஆழத்தில் உள்ளது. இங்கு மக்கள் விவசாயம் செய்கின்றனர்.

கத்தாரா காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எகிப்தின் மாத்ரு மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில், கடல் மட்டத்துக்கு 132 மீ. ஆழத்தில் உள்ள இந்தப் பெரிய நிலப்பகுதியானது மத்திய தரைக்கடலுக்கு அருகில் உள்ள பள்ளமான பகுதியாகும்.

காராகியே டிப்பிரஷன் (தாழ் நிலம்), கஜகஸ்தான்: கஜகஸ்தான் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு அருகேயுள்ள பெரிய வறண்ட பள்ளமானது கடல் மட்டத்திலிருந்து கீழே 132 மீ. ஆழத்தில் உள்ளது.

தி டெனகில் (டானகில்), எத்தியோப்பியா: கடல் மட்டத்திலிருந்து சுமார் 125 மீ. ஆழத்தில் உள்ள ஓர்ஆபத்தான பகுதி எரிமலைகள், உப்பு ஏரிகள், கந்தக நீரூற்றுகள் நிறைந்த விசித்திரமான பாலைவனப் பகுதியாகும்.

லகுனா டெல்கார்பன், அர்ஜென்டினா: அர்ஜென்டினாவின் மிக ஆழமான, தாழ்வான பகுதியான இந்த உப்பு ஏரி, கடல் மட்டத்திலிருந்து 105 மீ. ஆழத்தில் உள்ளது. சாண்டா குருஸ் மாகாணத்தில் உள்ள சான் ஜுலியன் வளைகுடாவுக்கு அருகில் உள்ளது.

மரணப்பள்ளத்தாக்கு, அமெரிக்கா: கலிபோர்னியா, நெவாடா மாநில எல்லைகளில் அமைந்துள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு. பூமியின் அதிகபட்ச வெப்பமான 56.6 டிகிரி செல்சியஸ் இங்கு பதிவாகியுள்ளது. கடல் மட்டத்துக்கு 86 மீ. கீழே உள்ளது. பாறைகள் இங்கு நகர்ந்து செல்லும் விசித்திரத்தைக் காணலாம்.

அக்சனையா பள்ளம், துர்க்மெனிஸ்தான்: வடமேற்கில் கராகா பாலைவனத்தில் உள்ள 300 மீ. ஆழத்தில் உள்ளது. செங்குத்தான பாறைகளும் வண்ணமயமான நிலப்பரப்புகளும் கொண்ட பூமியாகும். எரிவாயு ஏராளமாக உள்ளது. இதன் அருகில் 'நரகத்தின் வாயில்' எரிமலை உள்ளது.

சால்டன் கடல், அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய உப்பு ஏரி, கடல் மட்டத்திலிருந்து 69 மீ. ஆழத்தில் உள்ளது. 1905-ஆம் ஆண்டில் கொலராடோ நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்செயலாக உருவானது. இதில் உள்ள உப்பின் அளவு கடலின் உப்பு அளவைவிட 30% கூடுதலாகும். நீர் உறையும்போது உப்பு மேலும் அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.