சாகு' என்றால், பண்டம். அதாவது விளைபொருள். படி' என்றால் செய்தல். விளையும் பயிரை உற்பத்தி செய்வது சாகுபடி' ஆகும்.
அத்தி மரம் மட்டுமல்ல; அரச மரம், ஆலமரத்திலும் கூட பூக்களைக் காண இயலாது. அதாவது நம் பார்வைக்குப் புலப்படாது.
சிரியா நாட்டின் தலைநகரமாக கடந்த 4,500 ஆண்டுகளாக டமாஸ்கஸ் இருந்து வருகிறது.
காத்திரம்' என்றால் உடல். திடம்' என்றால் உறுதி. உறுதியான உடல்' என்ற பொருளிலேயே திடகாத்திரம்' என்ற தொடர் கையாளப்படுகிறது.
தந்தம்' என்றாலே யானைகள்தான் நினைவுகள் வரும். இருப்பினும், நீரில் வாழும் சீல் குடும்பத்தைச் சேர்ந்த வால்ரஸ்' போன்ற உயிரினத்துக்கும் தந்தம் உண்டு.
இரவில் உறங்குவது இன்துயில்'. அது மிகை நேரமாக இருந்தால், நீள்துயில். பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக இருந்தால், அது அறிதுயில். பிற்பகல் உணவு முடிந்து சற்றே கண் அயர்வது சிறுதுயில்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகை தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாத நோய் குணமாக...

இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை!
ஏபிஎம்சி சந்தையில் பல அடுக்கு வாகன நிறுத்தம்: மாநகராட்சி தீவிர நடவடிக்கை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


