பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

இளமை இனிதாக...

சாரண சிறுவர் இயக்கம் சேர்தல் சிறார் நமக்குச் சிறந்த ஒன்றே!

News image
Updated On :2 மே 2026, 6:30 pm

சாரண சிறுவர் இயக்கம் சேர்தல்

சிறார் நமக்குச் சிறந்த ஒன்றே!

காரணம் அறிந்தால் களிப்பும் கொள்வீர்!

கருத்தாய்ச் சங்கம் சேர்ந்தும் விடுவீர்!

-

உடலில் வலிமை வனப்பு வளரும்

உள்ள ஊக்கம் உயர்ந்தே ஒளிரும்!

திடமாய் மனதும் தினமும் திகழும்

திறமை பலவும் தன்னால் தோன்றும்!

-

நாட்டின் மீதும் பற்றை ஊட்டும்

நல்ல ஒழுக்கப் பாதை காட்டும்!

வீட்டுப் பணியில் விருப்பம் வளர்க்கும்!

வளரும் பருவம் இளமையும் இனிக்கும்!

-

அனைவரும் சோதரர் என்றே நினைப்போம்

எவர்க்கும் உதவிகள் என்றும் செய்வோம்!

வினைகள் யாவிலும் நேரம் பழகுவோம்!

விலங்குகள் இடத்தும் அன்பைக் காட்டுவோம்!

-

சான்றோர் போற்றிய சிக்கனச் சிறப்பும்

சீருடை வழியில் சமத்துவ உணர்வும்

ஆன்றோர் தூய்மை யாவும் வளர்த்து

ஓர்நாள் உனையும் ஆக்கும் தலைவனாய்!

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், மூவரசன்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.