சிறுவர் நூல் அரங்கம்
பல பத்திரிகைகளில் வெளியான சிறுவர் மற்றும் இளையோருக்கான பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டு 'குட்டி போட்ட பானை'யாக வெளிவந்துள்ளது.
குட்டி போட்ட பானை
பிரேமா அரவிந்தன்
விலை - ரூ. 75
பல பத்திரிகைகளில் வெளியான சிறுவர் மற்றும் இளையோருக்கான பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டு 'குட்டி போட்ட பானை'யாக வெளிவந்துள்ளது.
சேமிப்பு என்பது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எதிர்காலத் தேவைகளைச் சமாளிப்பதற்கும் மிக அவசியமானது. இதை வலியுறுத்தும் 'நம்பிக்கை நாற்று' சிறுகதை உள்பட பல நம்பிக்கை சிறுகதைகளும் இதில் உண்டு.
கெட்டிக்காரக் குட்டித்தவளை
பிரேமா அரவிந்தன்
விலை - ரூ.200
அனைத்துப் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் சிறுவன் மணி, ஒரு கட்டத்தில் 'தனக்கு நிகர் யாருமில்லை' என நினைத்து மற்றவர்களை அலட்சியமாக எண்ணுகிறான். விளைவு? பல போட்டிகளில் அவன் பின்தங்கி விடுகிறான்.
பரிசளிப்பு விழாவுக்கு வந்த பெரியவர், 'போட்டியில் வெற்றி தோல்வி சகஜம். அதேசமயம் யாரையும் குறைத்தும் மதிப்பிடக்கூடாது. போட்டிகளில் பங்குபெற வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்'' என்று பேசும்போது தெளிவு பெறுகிறான்.
இதுபோன்ற இளந்தளிருக்கு ஏற்ற 20 இனிய கதைகள் கொண்ட தொகுப்பு.
சகிப்புத் தன்மையே 'சக்சஸ்' தரும்!
நவீன்குமார்
விலை - ரூ. 75
உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே மனித நேயம். தொழில்நுட்பம் வளர வளர மனித நேயம் குறைந்து வருகிறது. அதனால் சகிப்புத்தன்மை, நன்றி மறவாமை, உண்மையான மகிழ்ச்சி போன்ற வாழ்வியல் தத்துவங்களை மனிதர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைன் மோசடி, சூறாவளி ஏன், எப்படி உருவாகிறது போன்ற தலைப்பில் தகவல் களஞ்சியமாக சில கட்டுரைகளும், விழிப்புணர்வுக் கட்டுரைகளும் இதில் உண்டு.
(மூன்று புத்தகங்களும் கோரல் வெளியீடு, சென்னை-600 055.
✆ 90430 50666)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

