இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

சாகச சிறுமி!

வாகனப் பந்தயங்களில் கலந்துகொண்டு புகழ்பெற வேண்டும் என்பது எனது அப்பா தாஜுதீனின் கனவு.

Published On :

'வாகனப் பந்தயங்களில் கலந்துகொண்டு புகழ்பெற வேண்டும் என்பது எனது அப்பா தாஜுதீனின் கனவு. அது நிறைவேறவில்லை. ஆனால், அந்தக் கனவை நான் நனவாக்கினேன். அப்பா தந்த உற்சாகத்தில் அனைத்துத் தர இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக லாரிகள், ஜே.சி.பி., டிப்பர்கள், புல்டோசர்கள், ரோடு ரோலர்கள், கிரேன்களை ஓட்டுவேன். சிறிய விமானத்தையும்கூட ஓட்டுவேன்' என்கிறார் மைசூரைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியான ரிஃபா தஸ்கீன்.

அவர் கூறியது:

'எனது அப்பா தாஜுதீன் வாகனப் பந்தய வீரர். தற்போது உணவகத்தை நடத்தி வருகிறார். அம்மா ஃபாத்திமா, தொடக்கப் பள்ளி ஆசிரியை. மூத்த சகோதரிக்குத் திருமணமாகிவிட்டது.

மூன்று வயதிலேயே, பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட காரை ஓட்டினேன். தொடர்ந்து பயிற்சி செய்தேன். ஐந்து வயதில், மைசூரிலிருந்து பெங்களூரு வரை துல்லியத்துடன் காரை ஓட்டிச் சென்றேன். அரசு அனுமதியைப் பெற்று சிறுவயதிலேயே வாகனங்களை ஓட்டினேன்.

2017-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதியன்று, திலக் நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் லாரி உள்பட பலவகை வாகனங்களை ஓட்டி, சாதனை படைத்தேன். அதற்கடுத்த ஆண்டு தசரா விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அலுவலராக வேண்டும் என்ற கனவும் இருக்கிறது' என்கிறார் ரிஃபா தஸ்கீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.